பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

152 க. அயோத்திதாஸப் பண்டிதர் வாரேல் வையகமுய்யும் நீதிநெறிகளைப் புகட்டி வாழ்வடையச் செய்வார்கள். அங்ஙனமின்றி பொய்யை மெய்யாகக் கூறி பேதையர் பால் பொருள் பரிப்போராதலின் சுவாசத்தால் வந்த பறைச்சிகள் கதையும், சுடுகாட்டில் வசிக்கும் அரிச்சந்திர னென்னும் அடிமைப் பறையன் கதையையும் பரக்கத் தீட்டிப் பரவச்செய்யும் பொய் மூட்டையைக் கட்டி விட்டார்கள். இப்பொய் மூட்டையாம் அரிச்சந்திர புராணமானது வேஷப் பிராமணர்களுக்கு எதிரிகளாக நின்ற பௌத்தர்களை பறையர்களென்றழைத்து அப்பெயரைப் பரவச் செய்வதற்கும் அவர்களை இழிவடையச் செய்து பாழ்படுத்துவதற்குமே யியற்றியுள்ளா ரென்பது சத்தியம் சத்தியமேயாம். வேஷப் பிராமணர்களால் பறையனென்று தாழ்த்தப் பட்டவன் பதினாயிரம் பொன்படைத்தாலுஞ் சரி சுடுகாட்டில் காவலிருப்பதை விட்டு நகருள் வரப்படாதென்பது அவர்கள் மநுதர்ம சாஸ்திர விதி. இவற்றுள் புத்தபிரானுக்கு சங்க அறரென்றும் சங்கமித்த ரென்றும் சங்கதரும ரென்றும் அனந்தம் பெயர்களுண்டு. இதிற்சங்கறரென்னும் புத்தரைச் சிந்திக்கும் சங்கத்தோர்களை சங்கரசாதிகளென்று வகுத்து இவர்களே சுடலை காப்பவர்களென்று மநு நூலி லெழுதிவைத்திருக் கிறார்கள். இன்னும் சம்மாசம் புத்தா என்னும் பெயரை சாம்பார், வீரசாம்பவர், சாம்பவனார், சுடலைக்காக்கும் வீர சாம்பவத் தோட்டி என்று பலவாறு இழிவு செய்து வருகின்றார்கள். இதல்லாமல் அரிச்சந்திர புராணத்திலில்லா பல விஷயங்களை அரிச்சந்திரன் கதையிலும் அவன் நாடகத்திலும், அவன் விலாசத்திலும், ஒருவர்க்கொருவர், தங்கள் பொய்க்கு பொய்யா பரணம் பூட்ட, பாம்பாக வந்தவர் முருகன், தரகனாக வந்தவன் வானமீன், தோட்டியாக வந்தவன் இயமன், அரிச்சந்திரன் தரகனைத் தூக்கிப்போனான். சந்திரமதி சுடுகாடு போகும்போது விஸ்வாமித்திரன் கல்லெறிந்தான், அரிச்சந்திரன் சுடுகாட்டில் கனவு கண்டெழுந்தான். என்றின்னம் பலவாறு புளுகிவிட்டார் கள். பொழுது விடியுமுன், குமாரனை அடக்கம் செய்து வருவேன் என்ற சந்திரமதி மறுபடியும் தன் ஆண்டை வீட்டுக்குப் போகாதது புராணப் படியே பொய்யல்லவோ? நன்றாகக் காவல் காப்பேனென்று வந்தவன் சுடுகாட்டு தடி. யை மந்திரியில் டம் கொடுத்துவிட்டு கனவு கண்டெழுந்தான் அரிச்சந்திர