பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை

இந்திரர் தேசத்துள் குடிபுகுந்த தந்திரிகளாகிய பார்ப்பார்கள் மாறுபடுத்திய பல கதைகளுள் இந்த ஒளவையார் கதையுமொன் றாகும். அதாவது, அம்பிகையம்மன் (1) இளங்கன்னிகா ஸ்திரியாயிருந்ததைக்கொண்டு, அதிகமானெடு மான் வஞ்சியென்றும், அதிகமானென்றும், அதிகனென்றும் பெயர் பெற்ற வஞ்சிநகர் வள்ளல் எல்லையிலிருந்த கருநெல்லிக் கனியை மேற்கூறுமரசனிடம் இரந்துண்டு அக்கனியால் தன் வயதினுமுதியவளாய் விளங்கி ஒளவையாரென்ற பெயர் பெற்றனளென்றும், (2) தென்பழனி மலைபுரத்தரசாகிய சுப்ரமணியனிடம் ஜம்புகனி கேட்டு அவமானமடைந்தனளென்றும், (3) தொன்மையிலா தென்மதுரை தமிழ் சங்க மமிழ்ந்தடங்க வென்றாளென்றும், (4) பொய்யுறு கம்பன் மெய்யுரு நடுங்கிப் போற்ற வாதிட்டாளென்றும், (5) ஆரியர்களாகிய பிரம்மருத்ர விட்டுணு எனும் மூன்று பார்ப்பார்களுடைய மனைவிமார்கள் அவதாரமே ஒளவையாரென்றும், (6) இந்து மத பகவன் என்னும் பார்ப்பானாகிய பாரசீகதேசத்தானும் இந்தியா தேச ஆதி என்னும் பறைச்சியும் செய்த விபசாரத்தால் அவ்வையார் பிறந்தாளென்றும் பிறந்து தனது தாய்க்கு ஆறுதல் கூறினதாகவும், (7) ஆதி நாடக மென்றொரு கூத்தாடி பறையரை யிழிவு செய்தும் (8) சகல வஞ்ஞான கதைகளிலும் ஒளவையாரெனுமோர் கிழவி யிருந்தாள் அவளால் பல நன்று விளைந்ததென்றும், (9) ஒளவையாரெனுமோர் பறைச்சி கூழமுதிரந்து கவிபாடும் வாணியாயிருந்தாளென்றும், புகழ்ந்து மிகழ்ந்தும் வரைந்து வைத்த கதைகள் யாவும், பார்ப்பார்கள் பௌத்தர்களை யழிக்க இவ்விதம் மாறுபடுத்தியதாகும். இக்காரண காரியங்க ளறிந்தொழுகா தமிழர்கள் வாதவூரார் பெயரிலேயே பதித்துள விருத்தத் தொகைக்கு திருவாசகமென்று நம்பி மோசம்போய்விட்டார்கள். இத்திருவாசகம் எனும் பெயர் நந்தேய இலக்கியமுறைக்கு மாறுபட்டதென்றும், அம்பிகையம்மனருளியதே யதார்த்த திரிவாசகமென்றும், இவ்வம்மனே நாம் வணங்கும் பூமிதேவியும், வானொளியுமாகுவாள் என்றினியேனு மிதனாலறிவார்களாக.

ஸ்ரீ. சிபு.சா.