பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முகவுரை

பூர்வகாலத் தென்பரத தேசத்தில் அந்நாட்டை யரசு நடாத்தி வாழ்ந்த சுந்திரவாகு அரசன் பெரும் பேறாக வந்துதித்து பெதும்பை வயதில் புத்த சுவாமியின் திருவுருவத்தை சிரந்தாங்கி, சங்கஞ் சார்ந்து உலகோர்க் கருண்மொழியருளி, உலக நாயகி, தேவமாதா, ஆண்டாள், சரஸ்வதி, உமையவள், திருசெல்வி, பாரதமாதா, ஒளவை பிராட்டி என்று பல பெயர் பெற்ற அம்பிகையம்மன் உமளநகர் சங்க வேம்புமரத்தடியிலமர்ந்து அக்கால கல்வி லக்ஷணப்படி சிறுவர்க்கு இந்திரர் தர்மத்தை எளிய நடையில் உயிர் மெய்வர்க்க மாலைபோல் முதல் வாசகம் நூற்றியெட்டு நெறிகளும் அவைகட்கு காப்பாக கடவுள் வாழ்த்து, “ஆத்திச் சுவட்டில் அமர்ந்த தேவனை ஏற்றியேற்றி தொழுவோம் யாமே” என்றும் வரைந்தனர். இவ்வாழ்த்தின் முதலடியிலுள்ள பதங்களே இக்காலத்தி லிந்நூலுக்கு “ஆத்திச்சுவடி” என்று பெயர் விளங்கி வருகின்றது. சைவர்கள் இம்முதல் வாசகத்தை தங்களுடைய தாக்கிக்கொள்ள “ஆத்திசூடி யமர்ந்த தேவனை யேத்தி யேத்தி தொழுவோமியாமே” என்றும், ஆத்திமலர்மாலை யணிந்த பேயோடாடி மகன் யானைமுகனைத் தொழுவோம் என்று விரிவுரை யெழுதியும் பிரசுரித்து விட்டார்கள். இந்நூலுள் “இணக்க மறிந்திணங்கு,” “வைகறை துயிலெழு” “எண்ணெழுத்திகழேல்” “ஓதுவதொழியேல்” என்ற வாசகங்களில் எதுகையும் மோனையும் பொருந்தியிருக்கின்றன இன்னுமற்ற வாசகங்களில் பொருந்தியும் பொருந்தாமலு மிருக்கின்றன.

இரண்டாம் வாசகம் : இது தொண்ணூற்றொரு நெறிகளும், இவைகளுக்கு இந்திரன் வணக்கம், “குன்றை வேந்தன் செல்வனடியிணை யென்று மேத்தித் தொழுவோமி யாமே” என்றும் முதல் வாசகம்போல் வர்க்கமாலையாகவும் எதுகைப் பொருந்த அகவலடி யென நினைக்க வரைந்திருக்கின்றனர். இக்காலத்தி லிந்நூற் காப்பாகிய கடவுள் வாழ்த்திலுள்ள முதலடி சீர்களால் “குன்றை வேந்தன்” எனவழங்கும். இந்த இரண்டாம் வாசகத்தை சைவர்கள் அபகரித்துக்கொள்ள, “கொன்றைவேந்தன் செல்வனடி யிணை யென்று மேத்தித்