பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சிந்தனைகள் - தொகுதி : இரண்டு தொழுவோமியாமே” என்றும், கொன்றைமாலையான் ஈன்ற யானைக் கன்றைத் தொழுவோம், என்றுரை பிறித்தும் மாற்றிவிட்டர்கள். வைஷ்ணவர்களோ! இந்நூலைத் தங்க (ளுடையதாக மாற்றிவைக்க "கன்றுமேய்க்குங் கண்ணனடி யிணையென்றுமேத்தித் தொழுவோமியாமே" என்றும், பாரத தூதனாகிய மணிவண்ணனைத் தொழுவோமென்றுரையுடன் கூறி வருகின்றார்கள். இவ்விருவாசகங்களும் அம்மனாலெழுதி யருளவே அவைகளை சமணாசிரியர்கள் பள்ளிப் பிள்ளைகட்கு கற்பித்து வந்தார்கள். இருவாசகங்களும் வழங்கிவருங்காலத்தில், 'சயம்பு" சிற்றரசனை “திவாகரவரசன்” நல்விசாரணையின்றி தண்டித்து சிறையிலடைப்பித்து வைத்திருக்கும் அநீதியையம்மன் முற்றுமறிந்து வேறொரு வாசகமுரைத்தாள். அது எழுபத்தாறு நெறிகளும் அவைகளுக்கு காப்பாகும், கடவுள் துதி. “வெற்றி ஞானம் வீரன் வாய்மெய் முற்றுமறிந்தோர் மூதறிவோரே” என்று எழுதியருளினார். துதியிலுள்ள முதலிருபதங்களே நூலுக்கு நாமமாக "வெற்றி ஞானம்" என்று இக்காலத்தில் வழங்கி வருகின்றது. மதுரை தமிழ் சங்கத்தார்களால் அதிவீரராம பாண்டியன் பாடிய வெற்றி வேற்கை யென்னும் நறுந்தொகை என்ற நவீன பெயரும் அதிவீரராம பாண்டியன் கூறாத "பிரணவப் பொருளாம் பெருந்தகை யைங்கரன் சரவணற் புதமலர் தலைக்கணிவோமே” என்று நரகஜன் ஆகிய யானைமுகன் வணக்கமும், வெற்றி வேற்கை வீரராமன் கொற்கையாளி குலசேகரன் புகல் நற்றமிழ் தெரிந்த நறுத்தொகைதன்னால் குற்றங்களைவோர் குறைவிலாதவரே என்ற நூற்பயனும் எழுதி யுணர்த்திவிட்டார்கள். இதில் ஒளவையார் கூறிய "மன்னர்க்கழகு செங்கோன் முறைமை” மந்திரிக்கழகு வரும்பொருளுரைத்தல்”வழியே ஏகுக வழியே மீளுக" "துணையோடல்வது நெடுவழிபோகேல்" முதலிய நெறிகளிலும் இன்னம் மற்ற நெறிகளிலும் எதுகை மோனை பொருந்தவும் பொருந்தாமலு மிருக்க எழுதியருளினார். முன்னிரண்டு வாசகங்களுடன் இதனை யுஞ் சேர்த்து திரிவாசகமென அக்காலத்திலேயே வழங்கப்பட்டது. ஆதியில் புத்த சுவாமி அருளிய திரிபிடகமாம் ஆதி வேதத்திற்கு வழிநூலாக திருவள்ளுவ நாயனார் திருக்குறள் எழுதி இந்திரராம்