பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 க. அயோத்திதாளலப் பண்டிதர் புத்த பிரான் தர்மத்தை சிறப்பித்ததுபோல், அவ்வையா ரென்னும், அம்பிகையம்மன் முதல் வேதத்தையும் வழிநூலையும் அநுசரித்து சார்பு நூலெழுதி புத்த தர்மத்தை போதித்துள்ளாள். திரிவாசக மென்பவை மூவகையான வசனங்களை யறிவிக்குமேயன்றி பல பாக்க ளடங்கிய நூலையுணர்த்தாது. இக்காலத்தில் பலவபுத்தர்கள் தோன்றி பல்வகை விருத்தங்களுக் கும் "திருவாச்கம்" என்று பெயர் சூட்டி பொய் புகல்வதால், பள்ளிக்கூடப் புத்தகங்களுக்கு முதல்வாசகம், இரண்டாம் வாசகமென்றும் அமிர்தவாசகன் மாணிக்க வாசகன் என்றும் வழங்கும் பெயர்களின் யதார்த்தமுணரவும் சக்தியற்றவர்கள் திருவாசகமே விருத்தம் என்று தாளங்கள் தட்டிவருகிருர்கள். இத்தாள வோசையைக் கேட்டு மயங்கி, ஒளவையார் அருளிச்செய்த மூன்று வாசகங்களையுங்கண்டு இவைகள் வாசகமா? அல்லது பாசுரமா? என்று சிலர் சந்தேகித்தும் சிலர் பாசுரமென்றும் சிலர் பாசுரமும் வாசகமுமல்லவென்றும் சிலர் பாசுரமே வாசகம்போல் தோன்றியுந்தோன்ருமலிருக்கின்ற தென்றும், சிலர் வாசகப்பா வென்றும் உரைத்துவருகின்ருர்கள். சிலர் தெய்வ வாக்கென்றும் அருண்மொழியென்றும் கூறுவர். புத்ததர்மம் சங்கவடைக்கலம் புகுந்து தெய்வமாக விளங்குவோர் நற்போதனைகளையே! தேவ வாக்கென்றும், அருளறவாழியான் பெருவழி யடைந்து கூறலே அருண்மொழி யென்றும் புகலப் படுமேயன்றி வேறல்ல அல்ல. தேவவாக்கும் அருண் மொழியும் இந்திரனும் புத்தசுவாமி போதனையாகவும், பெளத்தர்களெழுதிய ஐந்திலக்கண வனுசரிப்புமாக இல்லாமல் வேருகவொருவிதங் காணப்பட்டாலல்லவா? ஏனைய மதத்தோர்கள் கூறும்பொய் தேவ வாக்கும், பொய்யருண் மொழியும் நிலைபெறும், அங்கனமில்லா யித்திமிவாசகத்தை விவேகிகள் உற்று நோக்கல் தகுதியாகும். முற்காலத்தில் தமிழ் பாஷையானது மிக விசாலமாகவுந் தெளிவாகவும் அமரவாசியிலிருந்து தோன்றிவரும் வளர்பிறை போல் ஒங்கி வளர்ந்துக் கொண்டிருந்தது. அக்காலத்தார்கள் பெரும்பாலும் பாவிலக்கணந் தெரிந்தோர்களும் சொல்நெறி யுணர்ந்தவர்களுமா யிருந்ததால் சமணுசிரியர்கள் சிறுவர்க்குக் கல்வியாரம்பிக்குங் காலத்திலேயே எழுத்திலக்கணமும்,