பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை தென்னிந்திரர் தேச சகோதரர்களே! சிறிது கேளுங்கள். பூர்வம் நமது தேசத்துப் பெண்களுள் மிகவும் கல்வி கேள்விகளில் சிறந்து, ராஜகன்னிகாஸ்திரியாய் தேவேந்திரன் வியாரஞ்சேர்ந்து தரும பால்கடல் சரண நிலையினின்று, பரிநிர்வாணம் பெற்று வானுலகாம், தேளுலகு ஜோதி மயமாகச் சென்று, இந்திய வுலகில் பகவதியாகவும், ஸ்திரிகளுள் சிறந்த ராஜ கன்னியாஸ்திரியாகவும், தேவ பிராட்டி யாகவும், கிராம தேவியாகவும், தர்ம போதகியாகவும், விளங்கியவள் அம்பிகையம்மனே அவ்வம்மனை நம் மூதாதைகள் ஒளவையார், அம்மை, தேவி, ஜினதேவி என ஆடி மாதந்தோறும் பாடி துதித்ததுடன் அம்மனலோதிய “கொலையும் புலையங் களவுந் தவிர்” “காப்பது விரதம்” “நோன்பென்பது கொன்றுண்ணா மை” என்னும் சில மொழிகளையும் போற்றி சுகவாதியில் நிலைத்திருந்தார்கள். இதுவே பூர்வந்தொட்டு நாட்டினேர்கள் பூரீ ஆண்டாளை வழிபட்டு வந்த விவரமாகும் அதுவே நாம் ஒற்றுமையாயும் நற்கடைபிடித்தும் ஜாதியில் ஒரு தாய் பிள்ளைகளாயும் நிலவியிருந்த காலம். இப்படிப்பட்ட சிறந்த நம் சகோதரர்களை யழிக்கபல் லாண்டு கட்டு முன் பாரசீக தேசத்தில் பஞ்சத்தால் ஆட்பட்டு இந்திரர் நாட்டில், குடிபுகுந்த ஒரு சிறு கூட்டத்தாராகிய ஆரிய மிலேச்சர்கள் நம் நாட்டில், ஜாதி, குலம், வருணம், பிறப்பு பேதம், மனிதபேதம், தொழிற் பேதம் முதலிய ஆபாச மொழிகளோடு பிர்மாவின் முகத்தையும், புஜத்தையும், தொடையையும் காலையும் முறையே யோனியாகக் கொண்டு பிறந்த ஜாதியார்களும் உண்டென்று சாற்றி இந்தியர்களைப் பல வழிகளிலும் ஏமாறச்செய்து பணம்பறித்துத் தின்று கொழுத்து நாங்களே பிராமணர், நாங்களே உலகக் கடவுள் என்று கர்வித்து இந்திரர் தர்மத்திற்கெதிராக பொய் ஜாதிகளையும், பொய் ஆசாரங்களையும் மதமாய் உண்டாக்கி, நம்மை சேர்ந்து வாழவிடாமல், அண்ணன் மஞ்சள் திருமண்ணும் தம்பி சிவப்பு திருமண்ணும், தாய் ஒற்றைத் திருமண்ணும், தகப்பனர் வடகலைகுறியும், சிற்றப்பன் தென்கலைகுறியும், மாமன் குழைத்த சந்தனம் பூசலும் மைத்துனன் குழைக்கா விபூதி பூசலும், தங்கை தட்டைப் பொட்டும், தமக்கை