பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி இரண்டு I 45 நெட்டைப்பொட்டும், மருமகன் குழைக்காமல் பூசிய விபூதியை நடுவில் நெடுக கலைத்து விடுதலும், நெற்றியில் நெம்பர் ஒன்று (1) போல ஒரு கோடு போடலுமான சின்னங்களை யணிந்து பல வேதக்காரர்களாகத் திரிந்து கெட்டழிய எப்படி நம்மைத் திருப்பி விட்டார்களோ அப்படியே நம் கிராம தேவியாகிய, கொல்லா விரதம் நமக்கு உபதேசித்த நம் பாரத மாதாவுக்கு, நம்மை கொலைச்செய்ய சிறுக சிறுக கற்பித்துவிட்டு. நம்மிடமிருந்து, அவர்கள் நாக்கு ருசிக்கத் தின்பதற்கும் குடிப்பதற்கும் கள் சாராயத்திற் குதவியாக இளங் கன்றுக் குட்டிகளையும், இளம் ஆட்டுக்குட்டிகளையும், இளம் புருக் குஞ்சுகளையும், பலிகொடுத்தால் சுகமட்ைவீர்கள், கிராமம் ஷேமமாக நீர் நெல்லோங்குமெனவும், ஆடுமாடு இவைகள் தலை யில் பாபத்தையும், காணிக்கையையும் கட்டி கோவிலிடத்தில் விட்டுவிட்டால் புண்ய மென்றும் போதித்து விட்டார்கள். அம்மூடர்கள் கொள்கையில், நாமும் சிக்குண்டு கெட்டழிகின் ருேம். இக்காலத்திலேனும், நமது அம்மனுக்கு பலிகொடுப்பது முறைமையல்லவென்றறிந்து பார்ப்பார் பொய் சொற்களையும், அவர்கள் வேதங்களையும் அவசியம் நிராகரித்து நமது தேச சகோதரர் ஒற்றுமையில் நல் விசுவாசம் வைத்து நமது சொந்த மரியாதையான புத்த தர்மத்தைக் கைக்கொண்டு வாழ இப்புத்த கத்தை முற்றும் வாசிக்கும்படி கேட்டுக்கொள்ளுகின்ருேம். காளிகா தேவிக்கும், கன்னகைக்கும் ஒரு காலத்தில் நடந்த உயிர் பலியை போல் நம் அம்பிகையம்மனுகிய கிராம தேவதைக்கு செய்யக்கூடாது. அம்மன் ராஜ சுகபோகங்களைத் துறந்த பின்னர், சன்யாசினியாய் நின்று பதேசித்த அறம் பொருள் இன் பத்தைத் துறந்து சங்கத்தில் சேர்ந்து நீதியில் நிலைத்தவர்களுக்குத்தான் தேவர்களென்று பெயர். அவர்களை வணங்குவதுதான் நம் நாட்டு வழக்கம் அவர்கள் கூறும் தர்ம நூலுக்கு சங்கநூலென்றும் சங்க மருவிய நூலென்றும் புகழ்வர். ஆதலால் அம்மன் துறவறந்தான் துதிக்கத்தக்கது மற்றவையல்ல. ஆண்டர்சன்பேட்டை K.G.F பூரீ சித்தார்த்தா புத்தகம் 247.3 சுக்ல-u புத்தக சாலையார். ஆடி பெளர்ணமி