பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூரீ புத்தாய நம : தென்னிந்திரர் தேச புத்த தர்ம சாகூஜியக்காரர்களில் ஒருவராகிய பாரதமாதா ஒளவையார் எனும் பூரீ அம்பிகையம்மன் அருளிச்செய்த முதல் வாசகம் பூரீலறுரீ க. அயோத்திதாஸ் பண்டிதர் உரை ஆத்திச்சுவடி காப்பு ஆத்திச் சுவட்டில் அமர்ந்த தேவனை ஏற்றி யேற்றித் தொழு வோமியாமே. ஆத்தி - கல்லாத்தி, சுவட்டில் - நிழலின் கண், அமர்ந்த - வீற்றிருந்த, தேவனை - ஆதிதேவனம் புத்தபிரானை, யேற்றி யேற்றி - புகழ்ந்து மகிழ்ந்து, தொழுவாம் - வணங்குவாம் யாம் - யாங்களென்றவாறு. திராவிட பாஷையில் கல்லாலம் கல்லாத்தி யென்று வழங்கி வந்த மரப்பெயர், அரசன் மரத்தடியில் வீற்றிருக்கின் றனர் வீற்றிருக்கின்ருரென்னுங் காரியப் பெயர்கொண்டு அரச மரமென வழங்கலாயிற்று. கல்லாலங் கல்லாத்தியென்று வழங்கிவந்தப் பெயர்களை தாயுமானவர்க் கூறியுள்ள 'கல்லாலடிக்குள் வளர் சித்தாந்த முத்தி முதலே' எனும் வாக்கியத்திலுைம் மணிமேகலையிற் கூறியுள்ள ஆலமர்ச் செல்வன் மதன்விழாக்கோல் கொள் எனும் வாக்கியத்திலுைம்.