பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 2 க. அயோத்திதாளலப் பண்டிதர் அருங்கலைச் செப்பு கல்லாலப்பத்து ஆத்தியடியமர்ந்து ஆகமங்களாய்ந்து சாத்தன மக்களித்த சீர். எனும் செய்யுளாலு மறிந்துக் கொள்ளுவதன்றி தேவனென்னுமொழி ஆதி தேவனையே சிந்தித்துள்ள தாதலின் அவ் வாதி தேவனென்னும் பெயர் புத்த பிரானுக்குரிய வாயிர நாமங்களிலொன்றென்பதை அடியிற் குறித்துள்ள தெய்வப் பெயர்ச்செய்யுளாலு மறிந்துக் கொள்ளலாம். பின்கலை நிகண்டு தெய்வப் பெயர் தொகுதி 1, பாட்டு 17. தரும ராசன் முனிந்திரன் சினன் பஞ்ச தாரைவிட்டே யருள்சுரந்த வுணர்க் கூட்டுந்ததாகதன் ஆதிதேவன் விரவு சாக்கையனே சைனன் விநாயகன் சினந்தவிர்ந்தோன் அரசு நீழலிலிருந்தோன் அறி அறன் பகவன் செல்வன். இத்தகைய கலைவாசகத்தை தமிழ் மொழியாலமைக்க வாரம்பித்த ஞானத்தாய், புத்தபிரானம் ஆதிதேவனை காப்புக்கு முன்னெடுத்த காரணம் யாதென்பீரேல் உலக சீர்திருத்த மக்களுள் ஆதி பகவனெனத் தோன்றி தமிழ் பாஷையையி யற்றி அதனிலையால் சத்திய தன்மத்தைப் பரவச்செய்து தமிழர் பெருமானெனக் கொண்டாடப்பெற்ற வராதலால் தான் கூறியதமிழ் வாசக நூலுக்குத்ததாகதரையே காப்பாக சிந்தித் துள்ளாள். பின்கலை நிகண்டு, தொகுதி 12, பாட்டு 139, காப்புக்கு முன்னெடுக்குங் கடவுடான் மாலேயாகும் பூப்புனே மலரின் செல்வி புனைபவதை லானும் காப்பவி தைலானுங் கதிர்முடி கடகத்தோடு வாய்ப்பதா மதாணிபூணுல் வரிசையிற் புனைதலானும். வீரசோழியம் ஆவியனைத்துங் கசதநப,மவ், வரியும் வவ்வி லேவிய வெட்டும் யவ்வாறு ஞந்நான்கு மெல்லாவுலகு மேவிய வெண்குடை செம்பியன் வீரரா சேந்திரன்றன் நாவியல் செந்தமிட் சொல்லின் மொழி முதனன்னுதலே.