பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி இரண்டு I 3 யாப்பருங்கலக்காரிகை திறந்திடு மின்றீயவை பிற்காண்டு மாதர் இறந்து படிற்றெரிதா மேதம் உறந்துயர்கோன் தண்ணுர் மார்பிற் றமிழர் பெருமானைக் கண்ணுறக் காணக் கதவு. நூல் 1. அறன் செயல் விரும்பு அறன் - அறக்கடவுளாகும் புத்தபிரான், செயல் - செய்கை களாம், நற்காட்சி, நற்சிந்தை, நல்வசனம், நற்செய்கை, நல்வாழ்க்கை, நல்லுக்கம், நற்கருத்து நல்லமைதி இவைகளை விரும்பு-ஆசைக்கொள்ளுமென்பதாம். இச்செயலானது ஏழைகள் முதல் கனவான்கள் வரையி லும், பெரியோர்கள் முதல் சிறியோர்கள் வரையிலும், பிணியாளர்கள் முதல் சுகதேசிகள் வரையிலுஞ் செய்யக்கூடிய பொதுதன்மமாதலின் இவற்றை முதலில் விளக்கியுள்ளாள். அறனென்னும் வல்லின றகர மமைந்த தெய்வப் பெயர் உண்டோ வென்பாருமுண்டு. சீவகசிந்தாமணி கொடு வெஞ் சிலைவாய்க் கணையிற் கொடிதாய் நடு நாளிரவின் னவைதான் றிருமா னெடு வெண்ணிலவின் னிமிர்தேர் பரியா தடுமா ரெழினின்றற னேயருளே. இதற்காதரவாய் அறனை மறவேலென்னும் - வாசக முமுண்டு. அறக்கடவுளின் செயலாகும் அஷ்டாங்க மார்க் கத்தை பற்றுவோர் பாசபந்த பற்றுக்கள் யாவையு மறுத்தற்குப் பாதையதுவேயாதலின் அறன் செயலாம் பற்றினை விரும்பு ஆசைக் கொள்ளுமென்ருள்.