பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 க. அயோத்திதாஸப் பண்டிதர் திரிக்குறள் பற்றுக பற்றற்ருன் பற்றினை யப்பற்றை பற்று கபற்று விடற்கு. அறன், அறமென்னும் மொழிக்கு யீகையென்னும் பொருளையேற்பதாயின் இல்லறந் துறவறம், நல்லறம், பொல்ல றம், மெய்யறம், பொய்யறமாகுமிம் மொழிகளுக்குயெப் பொருள் பொருந்தும். செல்வப் பொருளுள்ளவனுக்கு யீகை யென்னும் மொழியேற்குமேயன்றி, செல்வப் பொருளில்லாதவ னுக்கு யீகையென்னுமொழி பொருந்தாவாம், ஆகலின் அறமென்னு மொழி சகலருக்கும் பொருந்தும் சத்தியதன்ம மொழியேயாம். 2. ஆறுவது சினம். ஆறுவது - தணியத் தகுவது, சினம் - கோபமேயாம். அறன்செய லென்னும், பற்றற்ருன் பற்றை விரும்பக்கூறி, உடனே கோபாக்கினியை தனிக்க வேண்டுமென்று கூறியக் காரணம் சகல நற்கிருத்திய செயல்களையுங் கெடுக்கக் கூடியவை சின மென்னுங் கோபமே யாதலின் அறவாழியான் செய2ல விரும்புவோர், அகக்கொதிப்பாகுங் கோபத்தை யாற்றவேண்டும். தன்னை சகல தீங்குகளினின்றுந் தப்பித்துக் கொள்ள யெண்ணமுடையவன் தன்னிடத் தெழுங் கோபத்தைக் காக்கவேண்டுமென்பதாம். பாம்பாட்டிசித்தர். மனமென்னுங் குதிரையை வாகனமாக்கி மதி யெனுங் கடிவாளம் வாயிற் பூட்டி சின மென்னுஞ் சீனிமேல் சீரா யேறி தெளிவுடன் சார விட்டாடாய் பாம்பே. வேமன்ன சதகம் கோபமுன்ன நரக கூபமுஜெந்துனு கோப முன்ன குணமு கொஞ்ச மகுனு கோப முன்ன பிரதுகு கொஞ்சமைபோவுனு விஸ்வதாபிராம வினரவேமா.