பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : இரண்டு 15 3. இயல்வதுகரவேல். இயல்வது உன்னல் செய்யத் தகுவதுஆகிய வித்தையை, கரவேல் - ஒளிக்காதே. உனது அறிவின் விருத்தியிலுைம், கேள்வியிலுைம், விடாமுயற்சியிலுைம், இயல்பிலுைம் உன்னல் தெரிந்து கொண்ட வித்தையை நீமட்டிலும் அநுபவித்து சுகியாமல் ஏனையோரும் அவ்வித்தையைக் கற்று சுகிக்கும் வழியைக் காட்ட வேண்டுமென்பதாம். இயல்பில் கண்டடைந்த வித்தையை யேனையோர்க்குதவாமல் ஒளிப்பதால் உள்ள வித்தை பிறர்க் குதவாமல் விருத்தி கெடுமென்பதாம். இதுவே அன்பு மிகுத்தவர்களின் செயலாகும். அறநெறி தீபம். ஐயெனத் தாம் பெருகுவதும் அறிவில்ை விளங்குவதும் உய்தவங் கேட்டுணர்வதுவும் உணர்ந்தவற்றைப் பிர ருளத்திற் செய்தவ நன்ருக்குதலுஞ் சிறந்தார் சொற்றேருதலும்னு மெய்யன்பை யுள்ளத்தில் மேவியவன் பயனுகும். 4. ஈவதை விலக்கேல். ஈவதை - ஒருவருக்கொருவர் கொடுப்பதை, விலக்கேல் - தடுக்காதீ ரென்பதாம். மக்கள் ஒருவருக்கொருவர் உபகாரங் கருதியே சேர்ந்து வாழ்பவர்களா யிருக்கின்ருர்கள். அத்தகைய வுபகாரச் சேர்க்கையை ஒருவருக்கொருவர் தடுத்து கெடுப்பதால் மதுகுல விருத்திக் கெட்டுப்போமென்பதாம். உனக்குள்ள வுலோப குணத்தை யெதிரிக்குங் கற்பித்து உனக்குள்ளக் கேட்டில் எதிரியையுஞ் சேர்த்துக் கெடுத்தல் இழிவேயாகும். கொடுக்கும் ஈகையுள்ளோன் குணத்துடன் கெடுக்கும் லோபியின் குணங் கலக்கு மாயின் பொன்னுடன் பித்தளையும், சோற்றுடன் மன லும், பாலுடன் நீருங் கலந்தது போல் அதன் பெருந்தகைய குணமுஞ் சிறந்த மதிப்பும், பரந்த கீர்த்தியும் நாசமடைந்துப் போம். ஆதலின் ஒவ்வோர் புருஷனும் வித்தை, புத்தி, யீகை, சன்மார்க்கமென்னும் நான் கிலும் நிலைத்தல்வேண்டும். அத்தகைய வுயர்ந்தோர் மாட்டே வுலகமுமென்னப்படும்.