பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 Ꮾ க. அயோத்திதாஸ்ப் பண்டிதர் மாதா என்னும் அம்பிகையம்மன் வாசக நூலியற்றிய காலம் ஆயிரத்தி யை ந்நூறு வருவுங்களுக்கு மேற்பட்டதாகும். ஆதலின் எள் நெய் தேய்த்து தலைமுழுகென்பது வாசக நூலின் காலவரைக்குப் பொருந்தாது. இன்னும் சகல தேச மக்களுக்கும் எண்ணெய் ஸ்நானம் பொருந்தாதென்பதுந் திண்னம். 17. ஞயம்படவுரை ஞயம் - நியாயம், பட இதயத்தி லூன்றும் படி, உரைசொல்வாயென்பதாம். நீர் ஒதும்படியான நீதிநெறி யமைந்த வாக்கியங்கள், எதிரியின் உள்ளத்திற்பட்டு உணரும்படி உரைக்க வேண்டு மென்பது கருத்தாம். ஒர் நியாயமுள்ளோன் கள்வனே நோக்கி அன்னியர் பொருளை அபகரிக்காதே என்பாயிைன், அக்கள்ளன் நியாயத்தை யுட்கொள்ளாது கோபமீண்டு நீர் களவாடாயோ? என்பான். அதே நியாயத்தைக் கள்வனைநோக்கி அப்பா நீவீர் மிக்க கஷ்டத்துடன் சம்பாதித்தப் பொருளை, மற்ருெருவன் அபகரித்துக் கொள்வாயிைன், உனக்கு பொருள் மீதுள்ள அவா விடுமோ? உன் மனம் ஆறுதலடையுமோ? என்ருல், விடாது ஆறுதலு மடையாது என்பான். மீண்டு மவனே நோக்கி, அதுபோல் நீயும் அன்னியன் பொருளை அபகரியாதிருப்பது அழகன்ருே வென்பாயிைன், அழகென்றும் சரியென்றும் தனதுள்ளத்திற்பட்டு களவு தொழிலை யகற்றுவான் ஆதலின் ஒதும் நியாயமானது ஒவ்வொருவருள்ளத்திற் படும்படி யுரைக்கவேண்டு மென்பதா திரிக்குறள் நயனின்று நன்றி பயக்கும் பயனின்று பண்பிற் றலைபிரியாச் சொல்.