பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி நான்கு I 15 மொழிகளையும் கேட்டப் பூர்வ பெளத்தக் குடி களிற் சிலர் ஜகநாதனென்பதும், ஜகத்குருவென்பதும், சங்கறரென்பதும், சங்கதருமரென்பதும் நமது புத்த பிரான் பெயராதலின் அவர்தான் வந்திருப்பாரென்றெண்ணி பேராநந்தங்கொண்டு வேனதட்சணை தாம்பூலங்களை யளிப்போரும் யானை ஒட்டகங் களுக்கு தீவனங்களளிப்போரும் வந்திருக்குங் கூட்டத்தோரைக் காப்போருமாக வுதவிபுரிய வாரம்பித்துக் கொண்டார்கள். விவேகமிகுத்த சிலக் குடிகளோ இவர்களை வேஷப்பிராமணப் பொய்க்குருக்களென்றறிந்து துரத்தியபோதிலும் அவிவேகி களின் கூட்ட மிகுத்திருக்கு மிடங்களில் விவேகிகளின் போதமேற்காமல் அவர்களைத் தங்களுக்கு விரோதிகளென்று கூறி அருகில் நெருங்கவிடாமற் செய்துகொண்டு தங்களது பொய்க்குரு வேஷத்தை மெய்க்குருபோல் நடித்து தேசங்களை சுற்றி வருங்கால் விவேக மிகுத்த பெளத்தக் கூட்டத்தோர்களால் யானை ஒட்டக முதலியவைகளைப் பரிகொடுத்து பல்லக்கு முடையுண்டு பொய்க்குருவு மடியுண்டு வோடியபோதினும் ஜகத்குருவென்று பொய்யைச் சொல்லி பல்லக்கிலேற்றித் திரிவதால் மிக்கப்பொருள் சேகரிப்பதற்கு வழியும் சுகரீவ னமுமா யிருக்கின்றபடியால் மறுபடியும் பல்லக்கு, ஒட்டகம், யானை முதலியவைகளை சேகரித்துக்கொண்டு தென்னுடெங் குஞ் சுற்றி பொருள்பரிக்கு மேதுவில் நின்றுவிட்டார்கள். ஆரிய வேஷப்பிராமணர்கள் செய்துவரும் படாடம்பப் பொய்க்குரு வேஷத்தால் திராவிட வேஷப்பிராமணர்கள் செய்துவரும் சிலாலய வரவு குன்றி கஷ்டம் நேரிட்டபடியால் தங்களாசிரியனுகும் சிவாச்சாரியின் பெயரை நீலகண்ட சிவாச்சாரியென நீட்டி இவர்தான் ஜகத்குரு இவர் தான் சிவாச்சாரி இவரால் போதித்துக் கட்டியுள்ள அறுகோண பீடமே முக்கியம் அவ்விடங் கொண்டுவந்து தட்சணை தாம்பூல மீவதே விசேஷமெனக் கூற வாரம்பித்துக்கொண்டதுமன்றி சங்கறராகிய ஜகத்குரு வடக்கே மகத நாட்டின் சக்கிரவர்த்தித் திருமகனுகப் பிறந்து சகலப் பற்றுக்களையுந் துறந்து நிருவான முற்று நித்தியசுகம் பெற்றதுடன் தானடைந்த சுகத்தை உலகில் தோன்றியுள்ள சகல மக்களும் பெற்று துக்கத்தை நீக்கிக் கொள்ளுவதற்காகத் தரணியெங்கும் சாது சங்கங்களை நாட்டி மெய்யறத்தை யூட்டி மத்திய பாதையில் விடுத்துவிட்டு பரி