பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 க. அயோத்திதாளலப் பண்டிதர் அருங்கலைச் செப்பு இந்தியத்தை வென்ருன் தொடர்பாட்டோ டாரம்ப முந்தி துறந்தான் முநி. மணிமேகலை இந்திரரெனப்படு மிறைவ நம்மிறைவன் றந்தநூற்பிடகம் மாத்திகாயமதென் சூளாமணி மாற்றவர் மண்டில மதனுளுழியா லேற்றிழி புடையன விரண்டுகண்டமாந் தேற்றிய விரண்டினுந் தென்முகத்தது பாற்றரும் புகழிய்ை பரதகண்டமே. சூளாமணி வேறு கந்துமாமணித்திரள் கடைந்த செம்பொனீள்சுவர் சந்துபோழ்ந்தியற்றிய தகடுவேய்ந்து வெண்பொனல் இந்திரன் றிருக்க குரிமெயோடு மிவ்வழி வந்திருந்தவண்ணமே அண்ணல்கோயில் வண்ணமே. இந்திரதேயத்தின் ஆதிபாஷையாகும். மகிட பாஷை யென்னும் பாலியை வரிவடிவ மின்றி ஒலிவடிவமாகவே பேசிவந்தார்கள். அக்கால் ஆதிபகவகுைம் புத்தபிரான் ஒதி வைத்த ஆதிவேதமொழி, ஆதிமறைமொழி யென்னும் திரிபீட வாக்கியங்களாம் மூவரு மொழிகளை வரிவடிவின்றி ஒலிவடிவ சுருதியாக போதிக்கவும் அதனைக் கேட்போர் சிந்தித்துத் தெளிவடைவதுமா யிருந்தபடி யால் சிலர் கேட்டும் அவரவர்கள் மனதிற் படியாமல் சுருதி மயக்கங்கண்ட மாதவன் சகடபாஷை யாம் சமஸ்கிருதத்தையும், திராவிட பாஷையாம் தழிழையும் வரிவடிவாக வியற்றி ஜினனென்னும் தனது பெயர் பெற்ற மலையில் வரிவடி வால் திரிசீலம், பஞ்சசீலம், அஷடசீலம், தசசீலமென்னும் மெய்யறத்தை வரைந்து சகல மக்கள் மனதிலும் பதியச்செய்ததுமன்றி இன்னு மவ் வரிவடிவ பாஷையைத்தான் நிலைநாட்டி வரும் சங்கத்தோர் யாவருக்கும் கற்பித்து சத்திய தன்மமானது மேலுமேலும் பரவுவதற்காக ஜனகர், வாமதேவர்,