பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி நான்கு 157 ஆரியர்கள் மாடுகளையும் குதிரைகளையுங் உயிருடன் சுட்டுத்தின்னக்கண்ட பெளத்தர்கள் அவர்களை மிலேச்ச ரென்றும் புலால் புசிக்கும் புலையரென்றும் இழிவுகூறி யகற்றி வந்தச் செயல்களானது கன்னட வேஷப்பிராமணர்களுக்கும் மராஷ்டக வேஷ ப் பிராமணர்களுக்கும் திராவிட வேஷ பிராமணர்களுக்கும் மனத்தாங்க லுண்டாகி பெளத்தர்களுக் கெதிரிடையாய் பெருங்கூட்ட விரோதிகள் பெருகிவிட்டார்கள். அத்தகையப் பெருக்கத்தால் வேஷப் பிராமணர்கள் யாவரும் தாங்களே சகலருக்குங் பெரியசாதி ளென்றேற்படுத்திக் கொண்டு தங்களது பொய்வேஷத்தையும் பொய் வேதங் களையும், பொய் வேதாந்தங்களையும், பொய்ச் சாதிகளையும், பொய்ப் புராணங்களையும் சகலருக்கும் விளங்கப் பறைந்து வந்தவர்களும் அவர்கள் கட்டுக்குள் அடங்காத பராயர்களுமாக விளங்கிய மேலோர்களாம் பெளத்தர்களை சகலருக்குந் தாழ்ந்தசாதிப் பறையரென்றும் வகுத்து தங்களை யடுத்தக் கல்வியற்ற சிற்றரசர்களுக்கும், கல்வியற்ற பெருங்குடிகளுக்கும் போதித்து இழிவடையச் செய்துவந்தது மன்றி பெளத்தர்க ளெங்கேனும் சுகத்திலிருப்பார்களாயின் தங்களுடைய நாணமற்ற வொழுக்கங்களையும், மிலேச்சச் செயல்களையும், பிராமண வேஷங்களையும் சகலருக்கும் பறைந்து தங்கள் கெளரதையை கெடுத்துவிடுவார்களென்னும் பயத்தால் பெளத்தர்கள் யாவரையும் யெவ்வகையால் கெடுத்து எவ்வகையால் நாசஞ்செய்து எவ்வகையாற் பாழ்படுத்தலா மோவென்னுங் கெடு யெண்ணத்தையே குடி கொள்ள வைத்துக்கொண்டார்கள். காரணமோவென்னில் பெளத்தர்கள் சுகச்சீருடனிருப் பார்களாயின் பெளத்தர்களது வேதவாக்கியங்களையும் பெளத்தர்களது வேதாந்தங்களாம் உபநிஷத்துக்களையும் அறஹத்துக்களாம் பிராமணர்களது செயல்களையும் விளக்கிக் கொண்டேவருவார்கள். அதல்ை தங்களது பொய்ப்பிராமண வே ஷங்களும், பொய்ச்சாதி வேஷங்களும், பொய்போத வேதங்களும், பொய் வேதாந்த கீதங்களும் பரக்க விளங்கிப் போமென்னும் பயத்தால் மேன் மக்களாம் பெளத்தர்களை