பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 க. அயோத்திதாஸ்ப் பண்டி தர் ளென்றும், தேசத்தின் ஆயத்துறையில் உட்கார்ந்து செட்.ாக சுங்கம் வசூல்செய்வோர் தேச ஆயச் செட்டி களென்றும் தென்மொழியி லழைக்கப்பெற்ருர்கள். தேசத்துக் குடி களுக்கோ ரிடுக்கும் வராமலும், ஆடு மாடுகளாம் சீவராசிகளுக்கோர் துன்பம் வராமலும் சத்துருக்களாகத் தோன்றும் மிருகாதிகளையும், எதிரி மக்களையும் வெல்லும்படியான வல்லபமும், புஜபல பராக்கிரமமுமாகிய rாத்திரிய மிகுத்தோனே வட மொழியில் கூடித்திரியனென்றும், எதிரிகளாம் துஷ்டர்களையும், துஷ்ட மிருகங்களையும் சம்மாரஞ் செய்யக்கூடிய வல்லபனை தென்மொழியில் அரன் அரயன் அரசனென்றும் அழைக்கப்பெற்ருர்கள். மகடபாஷை யாகும் பாலியில் சமணர்களென்றும், சகடபாஷையாம் சமஸ்கிருதத்தில் சிரமணரென்றும் அழைக்கப் பெற்று புத்த சங்கங்களாம் சாது சங்கங்களிலுள்ளவர்கள் தங்க ளிடைவிடா சாதன முயற்சியால் சித்திப்பெற்று காலமென்னும் மரணவுபாதையை ஜெயித்து ய மகாதகரான போது வடமொழியில் பிராமணனென்றழைக்கப் பெற்ருர்கள். சகட பாஷையில் சிரமண நிலை கடத்தவர்களையே பிராமணர்களென்றும், மகட பாஷையில் சமன நிலை கடந்தவர்களையே அறஹத்துக்களென்றுங் கூறப்படும். சாது சங்கத்திலிருந்து சாதன முதிர்ந்து தண்மெயாம் சாந்தம் நிறைந்து சருவ வுயிர்களையுந் தன்னுயிர்போற் கார்த்து சீவகாருண்ய வன்பில் நிலைத்தவர்களை திராவிட பாஷையாகும் தமிழ்மொழியில் அந்தணர்களென் றழைக்கப்பெற்ருர்கள். ஈதன்றி புத்த சங்கங்களாம் சாது சங்கங்களில் சேர்ந்துள்ளவர்கள் தங்கடங்கள் ஞான சாதன மிகுதியால் கட்புலனும் அதனிலையும், செவிபுலனும் அதனிலையும், நாவின் புலனும் அதனிலையும், நாசியின் புலனும், அதனிலையும், உடற்புலனும் அதனிலையுமாகும் புலன் தென்பட்டோர்களை திராவிடமாம் தமிழ்மொழியில் தென் புலத்தோரென்றும் அழைக்கப்பெற்ருர்கள். முன் கூறியுள்ள மூன்றுவகை வைசியருள் பூவைசியருக்கு மறுபெயர் உழவர், மேழியர், உழவாளர், வேளாளரென்றும்;