பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.3-4 க. அயோத்திதாளலப் பண்டிதர் அந்தணரென்றும் அழைக்கப்பெற்றப் பெயர் கோடி மனிதருள் ஒரு மனிதனுக்கு வாய்ப்பதரிது. ஏனெனில் புத்தருக்குரிய வாய்மெயும் புத்தருக்குரிய சாந்தமும், புத்தருக்குரிய அன்பும், புத்தருக்குரிய பற்றற் றச்செயலும், புத்தருக்குரிய யீகையும் சருவ சீவர்கள்மீதும் பதிந்திருந்த புத்தரது கருணையும், தனக்கு சிலர் தீங்கு செய்யினுந்தா னவர்களுக்குத் தீங்கு செய்யாது சுகமளித்த புத்தரதுச் செயலும் எக்காலும் யீகையே குடிகொண்டுள்ள புத்தரது குணமும் யாரிடத்தில் தோன்றுகிறதோ அவர்களையே பிராமணர்களென் றழைத்து வந்தார்கள். அதுகொண்டே புத்தபிரானை திருத்தக்கதேவர் தானியற்றியுள்ள சீவகசிந்தா மணியில் "ஆதிகாலத் தந்தணன் காதன்” என வரைந்திருக் கின்ருர். காக்கைபாடியனரும் தா மியற்றியுள்ள பாடியத்துள் “ஆதிகாலத் தந்தணன் அறவோ னென்றும் வரைந்திருக் கின்ருர். அத்தகையப் பற்றற்றச் செயலும் பரிபூரண நிலையும் அமைந்தவர்களையே அறஹத்தென்றும், பிராமணரென்றும், அந்தணரென்றும், பார்ப்பாரென்றும் சொல்லத்தகுமே யன்றி சகல பற்றுக்களும் நிறைந்துள்ள குடும்பிகளுக்கு அப்பெயர் பொருந்தவே பொருந்தாவாம். இத்தகைய பொருந்தா சிறந்த பெயரை மிலேச்சர்களாம் ஆரியர்கள் வைத்துக்கொண்டு பெளத்த தன்மமும் அதன் செயலுமறியாப் பெருங்குடிகளையும் மற்றும் சிற்றரசர்களையும் வஞ்சித்து பொருபரித்துண்டு டுத்தி வருங்கால்; இவர்கள் புருசீகநாட்டிலிருந்து நமது தேசம் வந்து குடியேறியவர்களென்று அஸ்வகோஷா நந்தனென்னும் அரசனுக்கு விளக்கியிருக்கின்ருர். அதாவது நந்த நந்தன. இந்த வேஷதாரிகள் நம்முடைய தேசத்தாரல்ல. இவர்கள் புருசிக தேசத்தார்கள் அப்புருசிக தேசத்திற்கும், உம்முடைய ஆசனத்திற்கும் வடமேற்கு திக்கில் 27-நாள் பிரயாணத் திலிருக்கின்றது. அவ்விடத்திற் சென்று இவர்களுடைய தேக நிறத்தையும்; இவர்களுடைய முகக் குறிகளையும், அவர்களுடைய முகக்குறிகளையும்; இவர்களுடைய புசிப்பின் வகைகளையும்,