பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி நான்கு 35 பேருண்டியையும், இவர்களுடைய பெண்களின் நடை யுடைச் செயல்களையும், அவர்களுடையப் பெண்களின் நடையுடைச் செயல்களையும்; இவர்கள் அக்கினியை அவியாமற் கார்த்துவரும் செயல்களையும், அவர்கள் அக்கினியை அவியா மற் ருெழுதுவரும் செயல்களையும். இவர்களுடையப் பெண்களுக்கு சூதகங்கண்டவுடன் 7 நாள் புறம்பே வைத்துவிடும் செயல் களையும், அவர்களுடைய பெண்களே சூதககாலங்களில் நீக்கிவைக்கும் செயல்களையும் உமது கண்களால் காண்பீராயின் இவர்களது மாறுவேஷந் தெள்ளற விளங்குமென்று கூறியவுடன் நந்தன் கொலு மண்டபத்தில் வந்திருந்த வேஷ பிராமணர் யாவரும் வெளியேறி நந்தனை தங்கள் தேசம்போய்ப் பார்க்காவண்ணம் சிதம்பச்சிலையமைத்து அரசனைக் கொன்றுவிட்டதாக அஸ்வகோஷா அவர்கள் எழுதியுள்ளதற் காதரவாக நந்தனென்னு மரசனை பிராமணர்கள் கொன்றுவிட்டதாக ரெவரெண்டு ரேனியஸ் என்பவர் தான் எழுதியுள்ள இந்துதேச சரித்திரத்திலு மெழுதியிருக்கின்ருர். இவ்வகையாக மிலேச்சர்கள் தங்கள் மிலேச்ச செயல்களுக்கும், வஞ்சகத்திற்கும், மாறுவேஷத்திற்கும் பயந்து தாங்கள் கேட்பதை யாரார் கொடுத்து வருகின்ருர்களோ அவர்கள் யாவரையுந் தங்கள் வசமாக்கிக்கொண்டு தங்கள் மாறுவேஷத்தைக் கண்டித்தும், தங்கள் பொய்மொழிகளையும், பொய்ப்போதனைகளையும், நம்பாது மற்றவர்களையும் நம்பவிடாது விலக்கிவந்த விவேகிகளைக்கொன்றும், சத்திய சங்கங்களை அழிக்கத்தக்க வுபாயங்களைச் செய்தும், அவர்கள் முன்னிலையிற் கிடைக்கும் தன்மநுாற்கள் யாவையும் பாழ்படுத்தியும் வந்தார்கள். இவற்றுள் பெளத்ததன்ம ஞான சாரமானது கோடி மக்களில் ஒருவருக்கு இருவருக்கு விளங்கக்கூடியதும் மற்ற வஞ்ஞான மிகுத்தோர்க்கு விளங்காததுமாயதால் பொருளா சையும் வஞ்சினமுமிகுத்த மிலேச்சர்களின் செயலை மெய்யென நம்பி மோசம் போனவர்கள் பலராகி விட்டார்கள். புருசீக தேசத்தாரின் பொய்யாகிய வஞ்சக வார்த்தைகளை மெய்யென நம்பி மோசம் போனவர்கள் பெருங்கூட்ட மாகிவிட்டபடியால் ஆதியில் பயந்து இத்தேசத்தில் பிச்சையிரந்