பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 க. அயோத்திதாஸ்ப் பண்டிதர் துண்ட மிலேச்சர்கள் பெளத்த சங்கத்திற் சித்திபெற்ற பிராமணர்களென வேஷமிட்டுக்கொண்டு இரண்டாவது அதிகாரத்துடன் பிச்சை யிரந்துண்ண வாரம்பித்துக் கொண்டார்கள். மூன்ருவது பெளத்த சங்கங்களை யேற்படுத்தி அவைக ளழியாதிருந்து சங்கத்தோரை போவித்து வருவதற்கு அரசர்களாலும், குடிகளாலும் வேண வுதவி புரிந்து வருவதுபோல தங்கள் வேஷ பிராமணக் கூட்டங்களும் ஒவ்வோரிடங்களிற் றங்கி சுகமாக சீவிப்பதற்கு ஒர் கைம்பெண்ணை வஞ்சித்து தங்களுக்கென்று கட்டிக்கொண்ட விவரத்தை அஸ்வகோஷா நன்கு விளக்கியிருக்கின்ருர். அதாவது இம்மிலேச்சராம் ஆரியக்கூட்டத்தார் புருசீக தேசத்தோரென் றறிந்துக்கொள்ளுவதற்காக யிவர்களித் தேசத்தில் கட்டியுள்ள ஒர் கட்டிடத்தின் சாயலையும், புருசீக தேசத்தின் கட்டிடங்களின் சாயலையுங் கண்டறிந்துக் கொள்ளும்படியாகப் போதித்துள்ள விடத்தில் புன்னுட்டிற்கு வடக்கே சகல சம்பத்தும் நிறைந்த மீனாட்சி யென்னும் ஒர் கைம்பெண்ணிருந்ததாகவும், அவளிடம் இவ்வேஷபிராமணர்க ளணுகி நாங்கள்தான் பிராமணர்களெனச் சில சகடபாஷா சுலோகங்களைச் சொல்லி அம்மா நீங்களிறந்து போனல் உங்கள் பெயராலும் ஒர் பெரிய கட்டிடங்கட்டி பிராமணர்களுக்கு முப்பொழு தன்னமிட்டு உங்கள் பெயர் என்றுமழியாதிருக்கச் செய்கின்ருேம். உங்கள் பூமிகளையும் சொத்துக்களையும் அக்கட்டிடத்தின் பெயரால் கற்களில் வரைந்துவைத்து விடுங்கோளென்று வஞ்சித்தெழுதி அவள் மரணமடைந்தவுடன் மீட்ைசி யென்னுங் கைம்பெண்ணினுடைய சகல சொத்துக் களையும் வேஷ பிராமணர்கள் பற்றிக் கொண்டு தங்கள் கூட்டத்தோருடன் சுகம்பெற வாரம்பித்துக் கொண்டார்களாம். பிச்சை யிரந்துண்பதுடன் இஃது மிக்க மேலாய சுகமென்றறிந்து மற்றுமுள்ளக் கல்வியற்றப் பெருங் குடிகளிடமும், காமியமுற்ற சிற்றரசர்களிடமுஞ் சென்று அவரவர்கள் சொத்துக்களைக்கொண்டும் மேற்கூறிய வகைபோன்றக் கட்டிடங்களை கட்டி சீவித்து வந்தவர்கள் தாங்களடுத் துள்ள சிற்றரசர்களைக்கொண்டு புத்த சங்கத்தோர்களையும் அப்புறப்படுத்தி அவைகளையுந் தங்கள்