பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : நான்கு 57 வேஷப்பிராமணர்கள் சங்கறரென்னும் பெயரையே வோராதாரமாகக்கொண்டு சங்கரவிஜய மென்னுமோர்க் கற்பனக் கதையை யேற்படுத்திக்கொண்டார்கள். அதாவது வேஷப்பிராமணர்கள் தோன்றி நீதிநெறி யொழுக்கங்களும் சத்திய தன்மங்களு மழிந்து அநீதியும் அசத்தியமும் பெருகி வருவது பிரத்தியட்ச வநுபவமாயிருக்க பெளத்தர்களால் நீதிநெறி தவரி அசத்தியம் பெருகுகிற தென்றும் அதற்காக சிவன் சங்கராச்சாரியாகவும் குமாரக்கடவுள் பட்டபாதராகவும், விஷ்ணுவும் ஆதிசேடனும் சங்கரிடனர் பதஞ்சலியாகவும், பிரமதேவன் மாணுக்களுகவும், அவதரித்து பெளத்தர்களை யழித்துவிட்டதாக வியாசர் சொன்னரென் றெழுதி வைத்துக்கொண்டு தங்களுக்குள் ஒவ்வொருவரை ஜகத்குரு சங்கராச்சாரி பரம்பரையோரெனப் பல்லக்கிலேற்றி பணஞ்சம்பாதிக்கும் எளிதான வழியைத் தேடிக்கொண்டார்கள். சித்தார்த்தி சக்கிரவர்த்தியவர்களின் தேசநிறம் அதிக வெளுப்பின்றியும், அதிகக் கருப்பின்றியும் மேகநிறம் போன்றதா யிருந்ததுகொண்டு மேகவருணனென்றும், கருப்பனென்றும், நீலகண்டனென்றும் வழங்கிவந்தது மன்றி அன்பே வோருருவாகத் தோன்றினரென்று அவரை சிவனென்றும் சிவகதி நாயகனென்றும் வழங்கி வந்தார்கள். புத்தபிரான் பரிநிருவாணமடைந்து அவரது தேகத்தை தகனஞ்செய்தபின்னர் அச்சாம்பலை புத்த சங்கத்தோர்களும் பெளத்த வரசர்களும், பெளத்த வுபாசகர்களும் எடுத்து வைத்துக் கொண்டு அவற்றிற்கு மகா பூதி யென்னும் பெயரளித்து அதிகாலையிலெழுந்து குருவை சிந்தித்து நீதிவழுவா நடையில் நடப்பதற்காகத் தங்கடங்கள் நெற்றிகளில் புத்த, தன்ம, சங்கமென மூன்று கோடு களிழுத்துப் பூசி வந்ததுடன் அவரது எக சடையை யுங் கத்திரித்து வெள்ளி கூடுகளிலும், பொன் கூடுகளிலும் அடக்கி வைத்து லய அங்கமென்றும், அங்கலயமென்றும், இலங்கமென்றுங் கூறி தங்கள் கழுத்துகளிலுங் கட்டி க் கொண்டார்கள். சித்தார்த்தரை தகனஞ்செய்த மகாபூதியென் னுஞ் சாம்பல் முகிந்து விட்ட போது அவ்வழக்கம் மாருது நெற்றியிலிடுவதற்கு எங்குங் கிடைக்கக்கூடிய சானச்சாம்பலை விபூதியென்று வழங்கிவந்தவற்றை சில பெளத்த வுபாசகர்கள்