பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ꮾ ? க. அயோத்திதாளலப் பண்டி தர் சாதிகளென் றேற்படிவு மாகிவிட்டபடி யால் இந்திரரது தேச சிறப்புங்குன்றி ஒற்றுமெய்க்கெட்டு வித்தைகளும் பாழடைந்து வருங்கால் இத்தேசக் குடி கள் இன்னுங் கெட்டுப் பாழடை வதற்கும் வேஷப் பிராமணர்கள் விருத்தி பெருவதற்கும் கல்லுகளைக் கடவுளெனத் தொழுது கற்ற வித்தைகள் யாவையு மறந்து கற்சிலைகளே தங்களுக்கு மோட்சங் கொடுக்கும் கற்சிலைகளே தங்களுக்கு சீவனங்கொடுக்கும் கற்சிலைகளே தங்கள் பிணிகளைப் போக்குமென்னும் அவிவேக நம்பிக்கை யில் நிலைத்து இன்னும் அவிவேகிகளாவதற்கு மற்றுமோர் தந்திரஞ் செய்ததாக அஸ்வகோஷரே வரைந்திருக்கின்ருர். அவை யாவெனில், சோனட்டி லோர் சிலாலயங்கட்டி குழவிபோற் கல்லிலடித்து மத்தியாந்தனமிட்டு கட்டி ட மேற்பரப்பில் தொளாந்திரங்கட்டி அதனுள் நீர் வார்த்தால் குழவிபோன்ற கல்லிலுள்ள ரந்திரத்தின் வழியாக வெளி தோன்றும்படி செய்து இனிப்பும், வாசனையும், பொருந்திய ரசங்கூட்டி தொளாந்திரத்தில் வார்த்து குடிகளை நோக்கி இதோ பாருங்கள். சுவாமியின் சிரசினின்று அமுதம் வடிகின்றது. அவற்றைப் புசிப்பீர்களாயின் உங்கள் தேகத்தில் வியாதியற்று வாழ்வதுடன் சகல வசிகரமுண்டாகி எங்கு சென்ருலும் சுகம்பெற்று வாழ்விர்கள். நீங்கள் கேட்டயாவுங் கிட்டு ம் சுருக்கத்தில் மோட்சமும் பெறுவீர்களென்று கூறியவுடன் கல்வியற்றக் குடிகளுக்கு தளத்தின்மீதே தொளாந்திரத்தினின்று இனிய நீர் வரு மு பாயந்தெரியாது அவ்வுருசியாய நீரை யருந்தினேர் யாவரும் அதன் இனிப்பான ருசியைக் கண்டும் அவை யெக்காலும் வடிந்துக்கொண்டே யிருக்கும் ஆட்சரியத்தைக் கொண்டும் அங்குள்ளக் குடிகள் யாவரும் மயங்கி கற்சிலைகளில் யாவோ சிரேஷ்டமுள்ள தென்று கருதி மேலும் மேலுங் கல்லே பூசிக்கவும், விழுந்து விழுந்து தொழுவதற் காரம்பிக்கவுமாகிய அசத்திய செயலும், மூட பக்தியும் . பெருகி தாங்களே கற்சிலைகளை யுண்டு செய்தது மல்லாமல் தாங்களே அதை மெய்க்கடவுளென்றும் நம்பி தொழுவதற்கும் ஆரம்பித்துக்கொண்டார்கள் ஆரியர்களோ காமியமுற்ற சிற்றரசர்களை தங்கள் வசமாக்கிக்கொண்டு தங்கள் வேஷ ப் பிராமணத்தை விருத்தி செய்துகொண்டதுபோல் நந்தனென்னும் அரசனையும் வஞ்சிக்க அவன் தேசத்தை நாடி,