பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி நான்கு 7 I முதலியவர்களின் பெயர்களைக் கொண்டே கெளதமர் பசுவின் வயிற்றிலும், கலைக்கோட்டார் மான் வயிற்றிலும் பிறந்தார்க ளென்னும் வட மொழி சுலோகங்களை வகுத்துக்கொண்டு மக்கள் சந்ததியில் புருடவகுப்பை முதற்கூறுவ தொழித்து பெண்களை முதற்கூறி வண்ணுத்தி வயிற்றிலும், வேடச்சி வயிற்றிலும், பறைச்சி வயிற்றிலும் பிறந்தார்களென் றேற்படுத்திக்கொண்டு வண்ணத்தியென்னும் பெயரும், வே டச்சியென்னும் பெயரும் பூர்வத்திலிருந்து வழங்கி வருவதுபோல இப்பறையன் பறைச்சி யென்னு மொழியும் பூர்வமுதல் வழங்கி வருகிறதென்று ரூ பித்து பெளத்த சங்கத்தோர்களையும், உபாசகர்களையு மிழிவுபடக்கூறி விவேக மிகுத்த மேன் மக்களைக் கீழ் மக்களாகவும், நான வொழுக்கினராகி பிச்சையேற்றுண்ணு மிலேச்சக் கீழ் மக்களா ந் தங்களை உயர்த்தி தங்களது பிராமண வேஷத்தை மெய்ப்படுத்திக் கொள்ளுவதற்கே யிந்தசுலோகத்தை யேற்படுத்தி வைத்திருக்கின்ருர்களென்று கூறியவுடன் அரசன்திடுக்கிட்டு சேஷனென்பவனை நோக்கி ஐயா தாம்கூறிய “ஸம்ஸ்சம்பூதோ” வென்னும் வடமொழிக்கு தென்மொழியில் “பறைச்சி” யென்னும் பொருள் எவ்வகையாற் பெற்றிருக்கின் றது. அவற்றை விவரிக்க வேண்டுமென்று வினவினன். அவற்றை வினவிய புருசீகர்கள் மூலைக்கொருவராக வெழுந்து பலவாறு வுளருங்கால் சங்காதிபர் சாம்பவனரெழுந்து நந்தனை நோக்கி அரசே, தன்னை ஆய்ந்தறியா அறிவிலிகளும், நிலையற்றவர்களும், வேத மொழியின் விவரமறியாதவர்களும், சீலமற்றவர்களும், நாணு வொழுக்கினர் களுமாகிய மிலேச்சர்கள் எம்மெய் நோக்கிப் பறையனென்றும், வெட்டுவோனென்றும் இழிந்தோனென்றுங் கூறிய விடும்பு மொழிகள் அவர்களது பொருமெயாலும் பாகுத்தறிவற்றப் பாங்கிலுைங் கூறினர்களன்றி வேறன்று. சுக்கில சுரோணிதத்தா லுதித்த ஒவ்வோர் மனிதனும் தனக்குறைவால் குழி வெட்டவும், தன மிகுதியால் பல்லக் கேறவும், தனமும் பலமு மிகுத்தால் அரயனுகவும, தனமும் விவேகமு மிகுத்தால் ஞானியாகவும் விளங்குவான். அங்ங்ன மின்றி பிச்சையேற்று நாண மறத் திரிவோனைப்