பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 Ꮾ க. அயோத்திதாஸப் பண்டி தர் துளுவ பாஷையைப் பேசுவதைவிட்டு சகட பாஷை யாம் வடமொழியையும், திராவிட பாஷை யாந் தமிழினையும் பேச வாரம்பித்துக்கொண்டவுடன் அப்பாஷைகளை வாசிக்கவும் கற்றுக்கொண்டு வடமொழியின் சுலோகங்களைப் பொருளறி யாமற் சொல்லித் தங்கள் பிராமண வேஷத்தைப் பெருக்கிக் கொண்டே வருவதுடன் காமியமுற்ற சிற்றரசரை வசப்படுத்திக்கொண்டு அவர்களது பூமியில் அவ்வரசர்க ளுயிருடன் இருப்பினும் இறப்பினும் அவர்கள் பெயரால் ஒவ்வோர் கட்டிடங்களைக் கட்டி கற்களினல் அவர்களைப் போன்ற சிலைகளைச் செய்து அவர்கள் குடும்பத்தோரை வந்து தொழும்படிச் செய்வதுடன் யேனையோரையுந் தொழும்படிச் செய்து பிச்சையேற்றுப் பொருள் பரிப்பதுடன் தொழுஉம் தட்சணையாலும் பொருள் சம்பாதித்துத் தங்கள் பெண்டு பிள்ளைகளைக் காப்பாற்றும்படி யாரம்பித்துக் கொண்டார்கள். இத்தேசக் குடிகளின் மயக்கத்திற்கும் ஏமாறுதற்குங் காரணம் யாதெனில், சகடபாஷையாம் வடமொழியை சகல குடிகளுங் கற்று பேசுதற்கேலாது வியாரங்களிலுள்ள சமண முநிவர்களும் பிராமண சிரேஷ்டர்களு மட்டும் பேசவும் வாசிக்கவு மிருந்தார்கள். மற்றயக்குடிகள் யாவரும் கற்பதற்கும், பேசுதற்கும் எளிதாயுள்ள திராவிட பாஷையாம் தமிழிடையே சாதித்து வந்தார்கள். அத்தகைய சாதனையில் இவ்வேஷப் பிராமணர்கள் கற்றுக்கொண்டுளரும் வடபாஷையின் சப்த பேதமும், பொருள்பேதமு மறியாது குடிகள் மோசம்போயது மன்றி சிற்றரசர்களு மிவர்களது மாய்கைக் குட்பட்டு மயங்கி வருகின்ருர்கள். இத்தகைய மாய்கையிற்ருமு முட்பட்டிருப் பீராயின் பூர்வ மெய்ஞ்ஞானச் செயல்களும் அதன் சாதனங்களு மழிந்து அஞ்ஞானமே மேலு மேலும் பெருகுமென்பதற்கு கையமில்லை. தங்களைப்போன்ற விசாரனையும் காமிய மற்ற வரசர்களுமா யில்லாதபடி யால் நாணமும் ஒழுக்கமு மற்ற மிலேச்சர்களின் மாய்கையினுக் குட்பட்டு மயங்கி தங்களையும் தங்கள் தேசக் குடிகளையும் கெடுத்துக்கொண்டதன்றி பெளத்த மடங்களுக்கும், பெளத்த மடாதிபர்களுக்கும் இடைஞ்சல்களைத் தேடி வைத்துவிட்டார்கள். அத்தகைய விடஞ்சல்களால்