பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிந்தனைகள் - தொகுதி நான்கு 77 எம்மெய்ப்போன்ற விசாரினைப் புருஷர்கள் யாவரும் தங்கடங்கள் வியாரங்களையும், அதனத தைாரங்களையும் விட்டகன்று பலதேச சஞ்சாரிகளாகவும் போய்விட்டபடியால் ஆரியர்களாம் அஞ்ஞானிகளின் செல்வாக்கதிகரித்துக் கொண்டே வருகின்றது. யதார்த்த பிராமணர்கள் குறைந்து வேஷப் பிராமணர்கள் பெருகி வருவதுடன் யாதார்த்த வியாரங்களாம் அறப்பள்ளிகளின் சிறப்புகளுங் குன்றி இறந்த வரசர்களைப்போல் சிலாவுருவஞ் செய்து வைத்துள்ள யிடங்களும், சிலையாலயம், சிலாலயமென வழங்கி வந்தவர்கள். அம்மொழியை மாற்றி சிலாலயம் சிவாலயமென வழங்கி வருகின்ருர்கள். ஆண் குறியும் பெண்குறியுமே சிருஷ்டி களுக் காதார ம்ெனக்கூறி கற்களின லக்குறிகள் செய்தமைத்து சிலைலிங்கம் சிலாலிங்கமென வழங்கி அம்மொழியையே சிவாலிங்கமென மாற்றி சிறப்பித்து மக்களுக்குக் காமியம் பெருகிக் கெடும் வழிகளை யுண்டுசெய்து வருகின்ருர்கள். ஆரியர் தங்கள் புருசிக தேசபாஷையை மறந்து சகட பாஷையாம் வட மொழியைப் பேசுவதற்கு ஆரம்பித்துக் கொண்டபடி யால் பெளத்த வியாரங்களில் தங்கியுள்ள வெதார்த்த பிராமணர்களால் வழங்கிவரும் வடமொழியென் றெண்ணி தங்களுக்குள்ளெழுஞ் சந்தேகங்களைத் தாங்க ளெடுத்துள்ள வேஷப்பிராமணர்களை வினவுவதால் அவர் களுக்கு உலக விவகார மொழிகளே தெள்ளற விளங்காதவர் களாதலின் வடமொழியுள் ஞானவிளக்க மொழிகளை கண்டு ரைக்க யேலாது மிக்கத்தெரிந்தவர்கள்போல் ஏழை மக்களுக்கு மாறுபட பொருளற்ற மொழிகளைப் புகட்டி பொய்யை மெய்யெனக்கூறி பொருள் பரித்துத் தின்று வருகின்ருர்கள். அவை யாதெனில் அறவாழி யந்தனனும் புத்தபிரானல் ஆதியில் போதித்துள்ள “செளப்பாபஸ்ஸ அகரணங், குளபலஸ் வுபசம்பதா, சசித்தபரியோதபனங், யே தங் புத்தான சாசன” மெனு முப்பீட வாக்கியத்தை மகட பாஷையில் முச்சுருதி மொழியென்றும், முப்பேத மொழியென்றும், முவ்வேத மொழியென்றும், மூவரு மொழியென்றும் வழங்கி வந்ததுமன்றி