பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி நான்கு 8,3 பெருந்துக்கமானது விடாது தொடர்ந்தே நிற்குமென்றும்; அவ்வாசாபாச கன்மபந்தப் பற்றுக்களை பற்ருது அறுத்து விடுதலே நிருவாணமென்றும், அந்நிருவாணமே பிறவியற்ற முத்திப்பேறென்றும், அம்முத்திப்பேறே சதானந்த தன்மகாய மென்றும், அதுவே இரவு பகலற்ற வொளியென்றும் தங்கடங்க ளனுபவத்திற்குங் காட்சிக்கும் பொருந்த வரைந்து வைத்துள்ளார்கள். அத்தகைய பிறவியின லுண்டாந்துக்கமும் அப்பிறவியை அறுத்தலின லுண்டாம் ககமும் இவ்வேஷ பிராமணர்களுக்கு விளங்கவே மாட்டாது. அவ்வகை விளங்காவிடினும் கல்வியற்றக் குடிகள் இவர்களை யடுத்து பிறவியை அறுக்கவேண்டுமென்று பெரியோர்கள் கூறுகின்ருர்களே அதன் வழி யென்வகை யென்று கேட்பார்களாயின் உன் தந்தை இறந்த திதியை அறிந்து வைத்துக்கொண்டு அத்திதி வருங்காலங்களிலெல்லாம் எங்களையொத்த பிராமணர்களுக்கு அரிசி பருப்பு, ஐங்காயம், நெய், வேஷட்டி, புடவை, குடை பாதரட்சை தட்சனை, தாம்பூலங்கொடுத்து வருவீர்களானல் இறந்த உன் தந்தையே வந்து பிண்டப்பிரசாதம் பெற்றுப்போவான். இவ்வகையாக சிலகாலம் பெற்றுப்போவானுயின் திரவிய சம்மந்தகைப் பிறப்பான். இதுபோல் புருஷன் இறந்துபோவான யின் பெண் சாதியானவள் வேறு விவாகஞ் செய்துக் கொள்ளாமல் புருஷன் சம்பாதித்து வைத்துள்ள சொத்துக்களை வருஷந்தோரும் எங்களையொத்த பிராமணர்களுக்கு தானமளித்து வருவாளாயின் அவள் புருஷன் மோட்சத்தை யடைவான். அப்பெண்ணுனவள் விருத்தாப்பிய மடைந்து விடு வாளாயின் மிகுந்துள்ள சொத்துக்கள் யாவையும் எங்களுத்திரவில்ை கட்டிவைத்துள்ள சிலாலயத்தின் பெயரால் சிலாசாசன ஞ் செய்து வைத்து விடுவாளாயின் அவளிறந்த பின் மறுபிறவியுண்டாகி தன் புருஷனுடன் சேர்ந்து விடு வாளென்றும் எங்களையொத்த பிராமணர்களுக்கே பூமி கொடுத்து பிராமணர்களுக்கே தானியமளித்து பிராமணர்களுக்கே பொருளிய்ந்து வருகிறவன் மறுபிறவியில் பூமிசெல்வத்தையும், தானியமளிப்பவன் தானிய சம்பத்தையும், பொருளளிப்பவன் தனசம்மந்தனுகப் பிறப்பான்.