பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : நான்கு 87 அவர்களது சுராபான புலாலின் பேருண்டி களையும்; இவர்களுடையப் பெண்களின் நாணமற்றச் செயலேயும், தந்திரோபாயங்களையும், அவ்விடமுள்ளப் பெண்களின் நாணமற்றச் செயலையும் அவர்களின் தந்திரோபாயங்களையும்; இவர்கள் தங்களவர்களைமட்டும் பாதுகாத்துவருஞ் செயலையும், அவ்விடமுள்ளவர்கள் தங்களைச் சார்ந்தவர்களுக்கு மட்டிலும் உபகாரஞ் செய்துக்கொண்டு யேனையோர்களைக் கருணையின்றி விரட்டுங் கூற்றையும்; இவர்களுடையப் பெண்கள் தங்கள் கணவர்களை மதியாது, பெயரிட்டழைக்கும் சப்தங்களையும், அவ்விடத்தியப் பெண்கள் தங்கள் கணவர்களை மதியாது பெயரிட்டழைக்கும் உல்லாசங்களையும்; இவர்களுடைய பெண்கள் சூதுசூதகங் கண்டதுமுதல் ஏழுநாள் வரை வெளியிற் கிடப்பதும், அவ்விடத்தியப்பெண்கள் சூதகங்கண்ட யேழுநாள் வெளியிற் கிடப்பதும், அந்தறங்கத்தில் இவர்கள் அக் கினியை வளர்த்துவருந் தந்திரங்களையும் அவ்விடத்தோர் அக்கினியைத் தொழுதுவருஞ் செயல்களையும் உமது கண்களால் நோக்கு வீராயின் இவர்கள் யாவரும் நம்முடைய தேசத்தோரன்று புறதேசத்தோரென்பது தெள்ளற விளங்கும். யீதன்றி நம்முடைய தேசக் கட்டிடப் போக்குகளையும், அவர்களது தேசக் கட்டி டச் சாயல்களையுங் கண்டறிய வேண்டு மாயின் புன் ட்ைடி ற்கு வடகிழக்கே இவர்களே கூடியோர் கட்டிடங் கட்டி வருகின்ருர்கள். இதன் சாயலையும், அவ்விடத்திய கட்டிடத்தின் சாயலையுங் காண்பீராயின் இக்கட்டி டச்சாயலே அக்கட்டிடச் சாயலென்றும், இவர்களே அவர்களென்பதும், அவர்களே இவர்களென்பதும் தெள்ளற விளங்கிப்போவதுடன் இத்தேசப் பூர்வ பெளத்தர்களுக்கும் இவ்வேஷப் பிராமணர்களுக்கு முள்ளத் தீராப்பகையிலுைம் இவர்களைப் புறநாட்டாரென்றே துணிந்து கூறல்வேண்டுமென சொல்லிவருங்கால் அரசனெழுந்து அஸ்வகோஷாவை வனங்கி அறஹத்தோ இத்தேசப் பெளத்தர்களுக்கும் இப் புருசிகர்களுக்கும் தீராப்பகை யுண்டாயக் காரணமென்னை மத்தியிலெவரும் அவற்றை நீக்காதர் செயலென்னை அவைகளை விளக்கி யா ட்கொள்ளவேண்டு மென்றடி பணிந்தான். அவற்றை வினவிய அஸ்வகோ ஷா வானந்தமுற்று பகை