பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 3 க. அயோத்திதாஸப் பண்டிதர் பள்ளிகளை விட்டகற்றியும் தன்ம நூற்களைக் கொளுத்தியும் சத்திய சங்கத்தையும், சத்திய தன் மத்தையும் பாழ்படுத்தி வந்ததன்றி இத்தேயத்தோர் வழங்கிவந்த தொழிற்பெயற்களில் சிலதை சாதிப்பெயர்களாக மாற்றி அதிற்றங்களை உயர்ந்தசாதி பிராமணர்களென வேற்படுத்திக்கொண்டு தங்களது பொய்ப் போதகங்களுக்குட்பாடாது பராயர்களாயிருந்தவர்களும் தங்கள் பொய்க்குருக்கள் வேஷங்களையும் தங்கள் பொய்ப் போதகங் களையுங் கல்வியற்றக் குடிகளுக்கும் காமியமுற்ற சிற்றரசர் களுக்கும் பறைந்துவந்து பெளத்த விவேகிகளைத் தாழ்ந்த சாதி பராயரென வழங்கி, பெளத்தர்களைக் கண்டவுடன் அவர்களது அடிக்கும் உதைக்கும் பயந்தோடும் புருசீகர்களை அவர்களைச் சார்ந்தக் குடிகள் யேன்.ஒடுகின்றீர்களென்று கேட்பார்களா யின் அடிக்கு பயந்தோடுவதைச் சொல்லாமல் அவர்கள் தாழ்ந்தசாதி பறையர்கள் அவர்கள் எங்களைத் தீண்டலாகாது நாங்களவர் களைத் தீண்டலாகா தென்னும் பெரும் பொய்யைச் சொல்லி, பெளத்தர்களைப் பாழ்படுத்தி அவர்களது சத்திய தன்மங்களையும் மாறுபடுத்திக்கொண்டு வருகின்ருர்கள். அதாவது புத்தம் ஆதியிற் போதிக்கப்பட்ட திரிபீடங்களாம் முதநூலுக்கு வழிநூற்களும் சார்பு நூற்களுமியற்றினவர்கள் பிரிதிவு, அப்பு, தேயு, வாயு வென்னும் நான்கு பூதங்களே முக்கியமானவைக ளென்றும், வெளியவை நான்கு பூதங்களுந் தோற்றுதற்கிட மென்றும், அப்பூதங்களுக்கு வடமொழியில் பிரிதிவு-பிரம மென்றும், தென்மொழியில் நிலம், மண், இரணியகருப்ப மென்றும், வடமொழியில் அப்பு மால்நாராயண மென்றும், தென்மொழியில் நீரென்றும், வடமொழியில் ருத் திரமென்றும், தென்மொழியில் ரவி, தீயென்றும், வடமொழியில் வாயு மயேசமென்றும் தென் மொழியில் காற்று மாயுலவியென்றும், வடமொழியில் ஆகாயம் சதாசிவமென்றும், தென்மொழியில் வெளி மன்றுளென்றும், பெயர் கொடுத்துள்ள துமன்றி தோன்றும் பொருட்களின் தோற்றத்திற்கு எக்காலு முள்ளது பூமியாதலின் அவற்றுள் தாழ்ந்திருக்கும் நிலையை கீழ் அக்கு, கிழக்கென்றும் உயர்ந்து நிற்கும் நிலையை மேல் அக்கு, மேர்க்கென்றும், கண்ணுக்கு யெட்டிய வரை யிற் போய் பார்க்கக்கூடிய நிலையை தென் அக்கு, தெர்க்கென்றும் கண்ணுக்கெட்டியவரைப் போய்ப் பார்க்கக்கூடாத பூமியை