பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி நான்கு 9.3 ஆடா அக்கு வடக்கென்று நான்கு திக்குகளை வகுத்தது மன்றி நீராகிய ஜலத்திற்கு நெகிழ்வு குளிர்ச்சி, வெண்ணிறமாகிய முக்குனங்களும், நெருப்பாகிய அக்கினிக்கு சுடுகை, சிவப்பு, புடைப்பாகிய முக்குணங்களும், வாயுவாகிய காற்றுக்கு மோதல், ஆதலாகிய விரு குணங்களும் வெளியாகிய ஆகாயத்திற்கு சருவசிவப் பிராணிகளின் சுவாசத்திற்குள்ள வூட்டல், தேட்டலாகிய விருகுணங்களும், என்றும் நிலையாயுள்ள நிலத்திற்கு யாதொரு குணமுமின்றி சருவத் தோற்றங்களுக்கும் ஆதரவாயிருந்து மோன நிலை கொண்டிருக்கின்றபடி யால் பிரம்ம இரணிய கருப்பமென்றும் நீராகிய ஜலமானது பூமியின் கீழும் ஆகாயத்திலும் மத்தியிலும் கருப்பையைப்போல் சூழ்ந்து வட்டமிட்டிருக்கின்றபடி யால் மால் நாராயண மென்றும், நெருப்பாகிய அக்கினியானது முகத்தணுகிப் பார்க்கக்கூடாத சுவாலையைப் பெற்றிருக்கிறபடி யால் ருத்திரம் அனலவ மென்றும், வாயுவாகியக் காற்ருனது சகல பிராணிகளின் சுவா சாதாரமா யிருக்கின்றபடியால் மயேஸ்வரம், துருத்தி யென்றும், வெளியாகிய விசுமபானது சகல பூதங்களையும் நிறப்பி விளிப்பதற்கு இடங்கொண்டிருக்கின்றபடி யால் சதாசிவம் பெருவெளியென்றும் அதனதன் குணத்திற்கும் செயலுக்கும் நிறத்திற்குந் தக்கப் பெயர்களைக் கொடுத்திருந்தார்கள். பெளத்த மடங்களிற் றங்கியிருந்த சமண முநிவர்களால் பூதங்களுக்கு இத்தகையப் பலப்பெயர்களைக் கொடுத் திருந்ததுமன்றி நிலம், நீர், நெருப்பு, காற்று விசும்பு, சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் யாவும் பூமியிற் ருேன்றியுள்ள சீவராசிகளிடத்து யாதொரு பலனையுங் கருதாது தாங்களே சகல பலன்களையும் கொடுத்து வருகின்றபடி யால் அப்பூதங்கள் யாவற்றையும் தெய்வப்பெயரில் சேர்த்து வரைந்து வைத்துள்ளதுமன்றி வழங்கியும் வருகின்ருர்கள். இத்தகையக் காரணக் காரியப் பெயர்களின் விவரங்கள் இப்புருசீகர்களாகும் வேஷப்பிராமணர்களுக்குத் தெரியாதிருப் பினும் மிக்கத் தெரிந்தவர்கள்போல் அபிநயித்து பூதங்களுக் கென்று வைத்துள்ள தேவர்களென்னும் பெயர்களில், நெருப்புக்கு வைத்துள்ள ருத்திரமென்னும் பெயரை ருத்திர னென்னும் ஒர் ஆணுருவாக்கி அவனுக்கு ருத்திரியென்னும் ஒர்