பக்கம்:சகல கலாவல்லி.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதை அதுபவமும் பயனும் 8የ .

பால் உண்ணவேண்டும். குழந்தை கண்டதை யெல்லாம் வாயிலே போட்டு விழுங்குவதைப் போலப் பலர் எல்லா வற்றையும் படிப்பர். நாம் எதைக் கொள்ளவேண்டும், எதைத் தள்ளவேண்டும் என்று அவர்களுக்குத் தெரியாது. சாரமற்றவற்றை ஒதுக்கித் தள்ள ஒரு தகுதி வேண்டும். நல்லதை உணர்ந்து தெரியும் ஆற்றல் (Sense of judgement) இருந்தால்தான் இலக்கியத் திறய்ைவும், இலக்கிய இன்ப நுகர்ச்சியும் கைகூடும். இதற்கும் வழிகாட்டுகிறவள் கஇ மகள்தான். .

அவள் கலத்தமிழ்த் தீம்பால் நீரினின்றும் வேறு படுத்தித் தெளிவு காட்டும் பெண் அன்னத்தைப் போல, ஒதிமப் பேட்டைப் போல, இருக்கிருள். நாமும் அவன் வழி காட்டினல் பால் வேறு, நீர் வேறு என்ற ஆராய்ந்து தமிழ்ப்பாலே உண்ணலாம். .

அன்னம் வெள்ளே நிறம் உடையது. கல்மகளும் வெண்ணிறம் உடையவள். அன்னத்தின் மூக்கும் அடியும் சிவந்திருக்கும். "படிக நிறமும் பவளச் செவ்வாயும்' (கம்பர்) என்று அவள் வெண்மைத் திருமேனியையும் சிவந்த திருவாயையும் வருணிப்பார்கள். அவள் திருவடிகள் சிவப்பை யுடையன என்பதைக் குமரகுருபர முனிவரே, "பஞ்சப்பிதந்தரு செய்ய பொற்பாத பங்கேருகம்" (5) என்று பாடியிருப்பதை முன்பு பார்த்தோம். ஆகவே, கலைமகளே வெள்ளோதிமப் பேடு என்று சொல்வது பல வகையிலும் பொருத்தமானது. அவள் அருளால், அவள் வழி காட்டுவதால், நாமும் அன்னம் பாலையும் நீரையும் பிரித்து அறிவது போல், சாரத்தையும் சக்கையையும் வேறு பிரித்து அறிந்து சாரத்தைக் கொண்டு பயன் அடையலாம்." இதை அடுத்தபடி சொல்கிருர் முனிவர்.

உளம்கொண்டு தொண்டர் தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால் அமுதம் தெளிக்கும் வண்ணம் காட்டும்வெள் ஓதிமப் பே.ே, சகலகலா அல்லியூே !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகல_கலாவல்லி.pdf/66&oldid=557897" இலிருந்து மீள்விக்கப்பட்டது