பக்கம்:சகல கலாவல்லி.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்று வரம்

கீல்வி கற்பவர்கள் யாவரும் ஒரே நிலையில் இருப் .வர்கள் அல்லர். குடத்தில் இட்ட விளக்கைப்போல், நன்மூகப் படித்திருந்தாலும், யாவரும் தெரிந்து கொள்ளும் படி விரித்துரைக்கும் ஆற்றல் எல்லோருக்கும் அமைவ தில்லை. 'சாகப் போளுயோ, பேசப் போனயோ?” என்று ஒரு பழமொழி உண்டு. அவையில் தெளிவாகப் பேசுவது சிலருக்கு மரண வேதனையை உண்டாக்குமாம். எவ்வளவு கற்றிருந்தும், கற்றதைப் பிறர் உளம் கொள்ள, செலச் சொல்வார் புலவர்களிற் சிறந்தவர்கள். அந்த ஆற்றல் சிலருக்கே வாய்க்கும். 'சொல்வளம், மல்லல் வெறுக்கையா மானவை மண்ணுறுத்தும், செல்வமும் உண்டு சிலரிக்கு" என்று குமரகுருபர முனிவரே நீதிநெறி விளக்கத்தில் சொல் கிருர், மரங்களில் மலர்கள் மலர்வது உண்டு. ஆளுல் எல்லா மலருக்கும் நறுமணம் இருப்பது இல்லை. சில மலர்களுக்கு மணம் இராது. கல்வி கற்றவர்கள் கல்வி கல்லாதவர் களிலும் சிறந்தவர்கள் - என்பதில் ஐயம் இல்லை. பல இலைகள் இருந்தாலும் மலருக்குச் சிறப்பு மிகுதி. கல்லா மாந்தர்களுக்கு இடையே கற்றவர்கள் இலைகளினுாடே. மலரைப் போல விளங்குவார்கள்.

ஆயினும் அந்த அளவில் நிற்பவரைவிடக் கற்றதை எடுத்துச் சொல்லும் ஆற்றல் உள்ளவர்கள் மலர்ந்து மணம் பரப்பும் நறுமலர்களைப் போன்றவர்கள்.

இன ர்ஊழ்த்தும் நாரு

மலர் அனையர், கற்றது உணர விரித்துரையா தார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகல_கலாவல்லி.pdf/68&oldid=557899" இலிருந்து மீள்விக்கப்பட்டது