பக்கம்:சகுந்தலா.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 சகுந்தலா 'இப்ப மட்டுமென்ன! எப்பவுமே தெரியாதுதான். பெரிய கவிதைப் பொருளாக இருக்குதே அது ' என்று சொன்னன் அவன். தனது ஹாஸ்யம் ரசிக்கப்படாமல் போய்விடுமோ என்ற சந்தேகத்தினுல் விளக்கமும் கூறினுன் புரிந்து கொள்ள முடியாத விஷயம்தான்' என்று. "இதுக்குப் பேரு கேசரியாம். தயாரித்து முடித்ததும் அக்கா சொன்னுங்க." 'சொன்னுல்தான் புரியும். இப்ப எல்லாம் புரிந்துவிட்ட மாதிரித்தான் தோணுது என்று அவன் சொல்லவும் அவள் சிரித்தாள். இப்பு என்னம்மா சிரிப்பு ? இப்படிச் சிரிக் காதே, சிரிக்காதேன்னு அன்றைக்கே சொல்லலே ? சொன்னிங்க. அதுக்கென்ன ? என்று சவாலிடும் பெண்ணிடம் என்ன சொல்லி எப்படி உணர வைப்பது என்று பேசாமலிருந்து விட்டான் ரகு. இந் தாம்மா கிண்ணம். புஸ்தகத்தையும் வாங்கிக் இட்டுப் போ, சீக்கிரம் போய்ச் சேரம்மா." அம்மா-அம்மா-அம்மா! என்ன பேச்சு இது! இந்தா உலகுன்னு சொன்ன என்னவாம் ? 'இந்தச் சின்ன விஷயத்திற்கு உனக்கு ஏன் இவ்வளவு கோபம் வருதோ தெரியலியே !' உங்களுக்கு ஒரு எழவுமே தெரியாதுதான். உ.ம். கொடுங்க. நான் சிக்கிரம் போகணும். அக்கா கண்டிப்பாக் கோபிக்கத்தான் போருங்க. எண்டி இவ்வளவு நேரம் ? அப்பவே வர் ஒதுக்தென்ன? தாட் பூட் துஞ்சாவூர்னு குதிப் பாங்க !’ என்று கூறி, அபாரச் சிரிப்பு சிந்தினுள் கன்னி. 'நீ மட்டும் இஷ்டம்போல் பேசலாம் போலிருக்கு. அம்மா என்கிறே, அக்கிர என்கிறே......" -

  • சரி சரி என்று எச்சலுடன் சொன்னுள் அவள், ரகு கொடுக்க வேண்டியவற்றைக் கொடுத்தான். அவற்றை வாங்கிக்கொண்டதும் அவள் பேசாமல் சரி, நான் போறேன். போயிட்டு வர்றேன் என்று சொல்லியபடி அங்கே கின்ருள். - - - - - - - -
  • ஏ உலகு. போறதால்ை ப்ோ. அங்ாவசியமாக நின்று கொண்டு போறேன், போறேன் என்காதே. உனக்குச்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/128&oldid=814716" இலிருந்து மீள்விக்கப்பட்டது