பக்கம்:சகுந்தலா.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சகுந்தல: さァ கிறதும் எழுதுவதுமா யிருந்தாராம். பிறகு பிரசங்கம் பண்ணப் போனுராம். அப்படிப் போன போதுதான் ஒரு சமயம் ஒரு ஊரிலே ஒரு பொம்பிளேயைக் கண்டு ஆசைப் பட்டு அவள் பின்னுலேயே திரிஞ்சாராம். அப்புறம் எப்படியோ இரண்டு பேரும் பிரிந்து விட்டார்கள். பிறகு ரெண்டு மூன்று வருஷங்கள் போனதும் அவருக்குத் திடீ ரென்று கல்யாணம் செய்து கொள்ளவேனும் என்கிற ஆசை ஏற்பட்டது போலிருக்கு. சொத்து சுகமெல்லாம் இருந்தால் பெண்தான கிடைக்காது ? அப்புறமென்ன, சகுந்தலே வாழ்க்கைப் பட்டாள். அவள் என்ன சுகத்தைக் கண்டாள்?’ என்று சொல்லி நெடுமூச்செறிந்தாள் கிழவி. அவள் மட்டும் தான கஷ்டப்படுகிரு. பாட்டி? எவ் வளவோ பேருக்குத் தான் கல்யாண வாழ்க்கை தொல்லே நிறைந்ததாக யிருக்கு!’ என்று பெரியதனம் பண்ண முயன் முன் அவன். ஆமா, நான் இல்லேயின்னு சொல்லலே. ஆனல் இந்த மனுசன் மாதிரி வேறே யாராவது இருப்பாங்களா என்கிறது சந்தேகம் தான். சுத்த மோசமான ஆளு. யாரைத் தான் சந்தேகிக்கிறது என்பதே கிடையாது. அவள் தான் இரண்டாம் தாரத்துக்காரி, இளவயசுக்காரியின்னு உனக்கு சந்தேகம். அதுக்காக நீ பெத்த மகனேயுமா சங் தேகிக்கனும்? யுேம் ஒரு பெரிய மனுஷன் மாதிரி அலேயி றியே, சி' என்று குற்றவாளியையே எதிரில் நிறுத்திப் பேசுவது போல் உணர்ச்சிப் பெருக்குடன் கூறினுள் அவள். ரகுராமனின் உள்ளம் விஷயத்தைக் கிரகித்துக் கொண் டது, வறண்டு கிடந்த நிலம் மழை நீரை ஆகர்ஷித்து ஐக் கியப் படுத்திக் கொள்வது போல, ஒ, விஷயம் இதுவா!' என்று எண்ணி நிமிர்ந்து உட்கார்ந்தான்.'நேற்று அவளேயும் அந்த வாலிபனேயும் ஒன்ருகப் பார்த்ததும் எனக்குக்கூட சந்தேகம் எழத்தான் செய்தது. ஆனால் அந்தப் பையன் யார் என்று தெரியாது எனக்கு. அவரே சந்தேகிப்ப தென்ருல் - இளேய மனேவியிடமும் மூத்த தாரத்தின் மகனி டமும் குடும்பத் தலைவனுக்கே கம்பிக்கை இல்லாமலிருக்கு மாளுல் - மோசமான மனோபாவம்தான். தன்னிடமே நம்பிக்கை அற்றுப்போன ஒருவனின் பயப் பிராந்தியினுல். வாழ வேண்டிய ஒரு பெண்ணின் பசிய வாழ்க்கையே கருகிப் போகிறது!’ சே, என்ன குடும்ப வாழ்வு வேண்டிக் கிடக் கிறது!’ என்று புழுங்கியது அவன் உள்ளம். .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/59&oldid=814812" இலிருந்து மீள்விக்கப்பட்டது