உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிசிராந்தையார் 95

மெல்லியன் கிழவன் ஆகி, வைகலும் வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு பரிவுதடி எடுக்கும் பிண்டம் நச்சின், யானே புக்க புலம்போலத் தானும் உண்ணுன்; உலகமும் கெடுமே.” (புறம், 184) என்னும் பாடலேப் பாடினர்.

புலவர் பாடலில் அறத்தின் குரல் முழங்குகின்ற தன்ருே புலவரின் முழக்கம் கேட்ட புவியாள் மன்னன் கலே நெஞ்சும் கருணே உணர்வும் கொண்ட காவலன் அல் லனே? கவிதை உள்ளத்தில் ஆழ்ந்திருக்கும் உண்மை யின் ஆற்றலே அனுபவத்தால் அறிந்த தமிழரசன் அல் லனுே அவன் சான்ருேராகிய பிசிராங்தையாரின் சொற் களேப் பொன்னே போல் போற்றி நல்லாட்சி நடத்தினுன். அறிவுடை நம்பி’ என்ற இயற்பெயர் பெற்ற அவன், அதனேயே அழியாப் புகழ்ச் சிறப்பினேக் குறிப்பதாகவும் பெற்ருன். அவன் அல்லனே மன்னன் அவன் அரசன்ருே தமிழரசு !

அறிவுரம் பெற்ற பிசிராந்தையாரின் உடல் பாண்டி நாட்டில் உலாவிக்கொண்டிருந்தது. ஆ ைல், அவர் உள்ள மோ, உறந்தையிலேயே வாழ்ந்தது. அந்நாளில் உறையூரைத் தலைநகராகக்கொண்டு ஆட்சி புரிந்த சோழ வேந்தன் கோப்பெருஞ்சோழன். அவன் ஆட்சியில் பொன்னி வளநாடு குறையேதுமின்றிப் பொலிவுற்று விளங்கியது. பாணரும் பரிசிலரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந் திருந்தனர். சோழன் தலை வாயிலே நாடி வந்த கலைஞர் அனவரும் கைநிறையப் பொன்னும் பொருளும் மணியும் துகிலும் பரிசிலாக்ப் பெற்று மீண்டனர். பசியால் வாடி வந்த இரவலர்க்கெல்லாம் ஆமையின் இறைச்சியையும் ஆரல்மீனின் கொழுவிய சூட்டையும் விளந்த வெங்கள்ளே யும் அவர் வேட்கை இருமட்டும் தருவதில் என்றும்