உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§§ சங்ககாலச் சான்ருேர்கள்

மன்னன் சலிப்புக் கண்டதில்லை. அவன் திருவோலக்கம் எஞ்ஞான்றும் இசை முழங்கும் பெருவிழாக் காட்சியையே அளித்தது. அவன் கன்னுடோ காளும் வற்ருத புது வருவாய் மிக உடையது. இத்தகைய சிறப்புக்களே யெல்லாம் பெற்று விளங்கிய அக்கோப்பெருஞ்சோழன், கோழியூராம் உறையூரினேத் தலைநக்ராக உடைய ஒப்பற்ற வேந்தனய் விளங்கின்ை; தன் வாழ்ந்ாள் முழுதும் பாணர் குடியை வாட்டி வதைத்து வந்த பசிப்பிணிக்குப் பெரும் பகைவனுய் விளங்கி விழுப்புகழ் பெற்றுத் திகழ்ந்தான் ; அதோடு புசையில்லா நட்பினே உடைய பொத்தியார் என் லும் புலவரோடு மாருத் தோழமை பூண்டு நாடோறும் மகிழ்ச்சிக் கடலில் திளேத்து இன் புற்றிருந்தான். இவ் அண்மைகளையெல்லாம் சான்ருேராகிய பிசிராந்தையார் பாடல் ஒன்றே கமக்கு உளங்கொளும் வகையில் சாற்று கின்றது :

தும்கோ யாரென வினவின் எம்கோக் களமர்க்(கு) அசித்த விளையல் வெங்கள் யாமைப் புழுக்கிற் காமம்வீட ஆரா ஆரற் கொழுஞ்சூடு) அங்கவு ளடச.அ வைகுதொழின் மடியு மடியா விழவின் யாணர் தன்னுட் டுள்ளும் பாணர் பைதற் சுற்றத்துப் பசிப்பகை யாகிக் கோழி யோனே கோப்பெருஞ் சோழன் பொத்தில் நண்பிற் பொத்தியொடு கெழீஇ வசயார் பெருநகை வைகலும் நக்கே. ’ (புறம். 313)

கட்பிலும் பெட்பிலும் சிறந்து விளங்கிய கோப் பெருஞ்சோழன் நற்பண்புகள், சான் ருே ராகிய பிசிராங் தையாரின் நெஞ்சைக் கவர்ந்தன. தாம் இருப்பது பாண்டி நாடே ஆயினும், அவன் வாழ்வது சோழ நாடே