உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிசிராந்தையார் 97

ஆயினும், கேட்டு வேட்ட அவர் கலை நெஞ்சம் கோப் பெருஞ்சோழன் பால் மாரு அன்பு கொள்ளலாயிற்று. புலவரைப் போன்றே கோப்பெருஞ்சோழனும் நெடுக் தொலைவில் இருந்த புலவர் பெருமானுராகிய பிசிராங்தை யாரின் இளமை தவழும் வளமை நிறைந்த வாழ்வினையும் புலமை கலங்கனிந்த கலேநெஞ்சின் ஆழத்தையும், உறுதி படைத்த ஒழுக்கத்தின் விழுப்பத்தினேயும் செவி வாயாக நெஞ்சு களளுக’ப் பல காலும் சான்ருேர் வாயிலாகக் கேட்டு அறிந்து, அவர்பால் தீராக் காதல் கொண்டான். இருவருக்கும் இடையே எழுந்த அன்புணர்வு-ஆர்வமாய் -நட்பாய்-காதலாய்-அதனினும் சிறந்த பெரும்பேருனர் வுமாய் உருக்கொள்ளல் ஆயிற்று. இருவருக்கும் இடை யே இருந்த நட்பின்-காதலின்-திறத்தையெல்லாம் அவர் கள் பாடிய அருந்தமிழ்ப் பாடல்களே இன்றும் நமக்கு எடுத்துரைக்கும் வல்லமை பெற்று விளங்குகின்றன. சான்ருக ஈண்டுப் புலவர் பிசிராந்தையார் பாடல் ஒன் றைக் காணல் சாலும், -

விரிததிர் பரப்பி உலகமுழுதாண்ட ஒருதனித் திகிரி உரவோன்’ மலை வாயில் வீழ்ந்துவிட்டான். கதிரவனே விழுங்கிய காரிருளேத் துரத்திக்கொண்டே நீல வானில் பால் நிலவு தன் முழு அழகையும் காட்டிய வண்ணம் எழு கிறது. தமிழ் போல ஓங்கி உயர்ந்து விரிந்து பரந்து கிடக்கும் விண்ணில் தோன்றிய முழு நிலவை-அத்தண் ணிலவைப்-பருகிய வண்ணம் பிசிராந்தையார் தம் இல் லத்து இளமரக்காவில் விற்றிருந்தார். கங்குல் கங்கை சூடிய மல்லிகை மலர் ப்ோல விளங்கும் அவ்வழகிய கிலா அவர் உள்ளத்தில் இன்ப வெள்ளத்தைப் பாய்ச்சியது. அஃது இன்ப உணர்வை அள்ளி வழங்கிய அந்நேரத்தி லேயே துன்ப உணர்வையும் தோற்றுவித்துப் புலவர் பெருமாளுரின் கலே நெஞ்சை வெதுப்பத் தொடங்கியது.

o