உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 சங்ககாலச் சான்ருேர்கள்

புலவர் பிசிராந்தையார்-கோப்பெருஞ்சோழனது உயிர் ஒம்பும் உழுவல் நண்பர்-உள்ளம் காதற்கடலாயிற்று. வெண்ணிலவைக் கண்டு பொங்கும் விரிதிரைக் கடல் போல அவர் காதல் நெஞ்சில் உணர்வு அலைகள் ஓவென எழுந்து முழங்கலாயின. அம்முழக்கத்தின் எதிரொலி யை இன்றும் காம் அவர் பாடிய அழகிய பாடலில் கேட் கலாம்.

வான்மதியின் முழுநகையைக் கண்ட புலவர் நெஞ் சம் காதல் கொண்ட கற்புடைத் தலைவி போலக் கலங்கி வருக்தலாயிற்று. தலே சிறந்த அரசியல் அறிவு பெற்ற அத்தண்டமிழ்ப் புலவரின் நெஞ்சம் உணர்வு மயமா யிற்று, உறந்தையோனே, உயிரினும் சிறந்த அண் னலே, உன்னேக் காணும் நாள் எந்நாளோ! இடை யீடின்றி உன்ளுேடேயே உறையும் நாள் எந்நாளோ!' என்று தம் உள்ளம் கவர்ந்த கள்வனேக்-காதலனேஎண்ணி அவர் காதல் நெஞ்சம் கலங்கலாயிற் று. தம்மை மறந்தார் புலவர்; தம் கிலே மறந்தார்; செயிர்திர் கற்புடைச் சேயிழை ஆர்ை; தூண்டிற் புழுவினேப் போலக்-கூண்டுக்கிளியைப் போலப்-பொறுக்க ஒண்ணுப் பிரிவுத்துயரால் துடித்தார். அச்சமயம் தென்திசை சென்று இரை தேடிய அன்னச்சேவல் ஒன்று தன் பெடையுடன் வடதிசை நோக்கி விரைந்து செல்வதைக் கண்டார், அகல்வானில் அன்னத்தையும் அது செல் லும் திசையையும் விரைவையும் கண்ட புலவர் மனத்தில் உறங்கிக்கிடந்த கற்பனே உணர்வு ஓங்கி எழல் ஆயிற்று. அவர் தம்மைத் கலேவியாகவும், அன்னத்தைத் துரது போய் அணி மாலே வாங்கி வரவல்ல ஆருயிர்த் தோழி யாகவும் கருதிக்கொண்டார். பு ல வ ரு ைட ய கற்பனே ஊற்றெடுக்கலாயிற்று.

அன்னம், கிள்ளே மான் முதலியன ஆறறிவற்ற