உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிசிராந்தையார் 9%

உயிர்கள் ; ஒருவர் சொல்வதைக் கேட்டுப் பிறர்பால் சென்று சொல்லும் ஆற் ற ல் அற்றவை. ஆல்ை, குழந்தை உள்ளத்திற்கும், காதல் இதயத்திற்கும், கற் பனை நெஞ்சிற்கும் உள்ள ஆற்றல் தனிச் சிறப்பு வாய்க் தது ஆகும்; ஒடி விளேயாடும் அன்புச் செல்வத்திற்குஆடி வரும் தேனுக்கு-உயிரற்ற மரப்பாவை உற்ற தோழன். ஆருயிர்க் காதலன் பிரிவால் ஆருத்துயர் உழக்கும் அணங்கிற்கு அன்னமும் கிள்ளேயும் மானும் உயிர்க்கினிய தோழியர். அவ்வாறே கலைஞன் கலே உணர்விற்கு-கற்பனே நெஞ்சிற்கு-ஆடும் கொடியும், ஒடும் ஆறும், வீசும் தென்றலும், விரியும் மலரும் ஆறறிவு படைத்த அறிவும் உணர்வும் நிறைந்த உயிர்கள். குழக் தையின் கண்-காதலியின் பார்வை-புலவன் கருத்து இவை பட்டால் கல்லும் புல்லும் பாடும் ; மரமும் மலேயும் பேசும்; அருவியும் கடலும் ஆடும் ஆம் அதுதான் காவற்ற நெஞ்சில் எழும் கற்பனையின் ஆற்றல்; உயிரற்ற பொருள்கட்கும் உயிர்கொடுக்கும் உள்ளப்பண்பு. இப் பண்பின் திறனேப் பண்டுதொட்டு இன்று வரை இலக் கியங்களிலும் வாழ்க்கையிலும் காணலாம்.

அன்னம் முதலியவற்றைக் கேட்குங் போலவும் கிளக்குங் போலவும், இயங்குங் போலவும் இயற்றுக போல வும் கருதிக் கவி பாடல் தமிழ் இலக்கியத் துறையில் நெடுங்காலமாய் கிலேத்து கிற்கும் மரபு. பிற்காலத்தில் து.ாது எனப் பெயர் தாங்கிப் பிரபந்தமாகவே பெருகி வளர்ந்த இந்நெறி சங்க இலக்கியப் பாடல்களுள்ளேயும் காணப்படுகின்றது. இவ்வுண்மையைப் பிசிராந்தையார் பாடலும் நமக்குப் புலப்படுத்துகிறது.

  • அன்னச் சேவலே, அன்னச் சேவலே, வீரப்போர் புரிந்து மாற்ருரை வென்று வீழ்த்தி வெற்றி மிகப்

1. நன்னூல், சூ. 409.