உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1ፅፀ சங்ககாலச் சான்ருேர்கள்

பெற்று விளங்கும் தலைவனது தண்ணளி புரியும் திரு முகம் போலப் பொலிவுதரும்-இருமுனேயும் ஒன்றுகூடி விளங்கும்-எழில் நிறைந்த முழுநிலவு ஒளி வீசி நிற்கின் றது. தமியரானுரை வாட்டி அறிவை மயக்கும் இந்த அந்தி வேளையில் யான் செயலற்று வருந்திக் கிட்க் கிறேன் ! நீயோ, தென் திசைக்கண் உள்ள குமரிப் பெருங் துறையில் அயிரை மீனினே மேய்ந்து வடதிசைக்கண் உள்ள பேரிமயம் கோக்கிப் பெயர்கின்ருய். அவ்வாரு யின், இடையில் உள் ள சோழ நாட்டினேக் கடந்துதான் செல்லல் வேண்டும். அதுபோழ்து என்பொருட்டு அச் சோழ காட்டில் கோழியூராகிய உறையூரின் கண் உள்ள உயர்நிலை மாடத்திலே உன் பெடையுடனே சற்றே தங்கு. வாயில் காவலர் எவரிடமும் நீ ஏதும் உரைக்கவேண்டுவ தில்லை. தடையேதும் இன்றிக் காவலன் கோயிலுள் நீ புகலாம். அங்கு எம் பெருங்கோக்கிள்ளி இனிது விற் றிருப்பான். அவன் திருச்செவிகள் கேட்கும் வண்ணம், நான் பிசிராங்தையின் அடிமை, என்று ஒரு சொல் சொல்லுதல் போதும், சிறந்த உன் அன்புறு பேடை அணிந்து அகமிக மகிழ்ந்து இன்புற கினக்குத் தன் விருப்பத்திற்குரியவான அழகிய அணிகலன் களெல்லாம் உவந்து அளிப்பான்,' என்னும் கருத்தமைந்த

அன்னச் சேவல் அன்னச் சேவல்! ஆடுகொள் வென்றி அடுபோர் அண்ணல் நாடுதலை யளிக்கும் ஒண்முகம் போலக் கோடுகூடு மதியம் முகிழ்நிலா விளங்கும் மையல் மாலையாம் கையறு(பு) இனையக் குமரியம் பெருந்துறை அயிரை மாந்தி வடமலைப் பெயர்குவை ஆயின், இடையது சோழநல் நாட்டுப் படினே, கோழி உயர்நிலை மாடத்துக் குறும்பறை யசைஇ