உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Hú2 சங்ககாலச் சான்ருேர்கள்

தான் பெருங்கோக்கிள்ளி ; என்னுடைய மக்களா இவர் கள் : பண்பற்ற பதடிகள் போல அல்லவோ நடக்கின்ருர் கள் இவ்வறமற்ற சிந்தையர்க்கு என் கூர்வாளே பாடம் கற்பிக்கும் உள்ளப்பண்பு ஒரு சிறிதும் அற்ற இவர்கள் என் உதிரத்து உதித்த மக்க ள | ன ல் என்ன, வேறு யாராயினுந்தான் என்ன ! . என்று இடி போல முழங் கினன். அவன் இடி முழக்கத்தை எதிரொலி செய்வது போலப் போர் முரசங்கள் முழங்கின. மன்னன் களம் புகுக்தான்.

அங்காளில் சோழ மன்னன் பே ைவ ைய அணி செய்த அரசவைப் புலவர் பெருமக்களுள் புல்லாற்றுர் எயிற்றியனுச் என்பவர் தலை சிறந்தவராய் விளங்கினர். அவருக்குச் செய்தி எட்டியது. அவர் கோழியூரானது கோபக்கனல் தெறிக்கும் வஞ்சின மொழிகளேக் கேள்வி யுற்ருர். அந்தோ! போரா! தந்தையைப் பகைத்து மக் களும், மக்களே எதிர்த்துத் தந்தையும் செய்யும் போரா! கொடிது கொடிது! அதுவும் கருணையே வடிவெடுத்த காவேரித்தாய் பாய்ந்து வளஞ்சுரக்கும் கழனி நாட்டிலா! வழுவவியாச் சோழர் குடியிலா ! இது காணத்தகுவது !’ என எண்ணி, அவர் அருள் நெஞ்சம் துடித்தது. எவ் வாறேனும் இப்போரை கிறுத்துவதே நம் கடன். சோழ வேந்தன் மிக உயர்ந்தவன். அறிவிலா மக்களால் அவன் மனம் தியாகிவிட்டது. தண்ணுர் தமிழ் கொண்டு அவன் நெஞ்சைத் தணிப்போம் ; போர் நிற்கும்; அமைதி கில வும் ; பழியேதுமின்றிச் சோழர் குடியும் உய்யும், என உள்ளத்தில் உறுதி கொண்டவராய்ப் போர்க்களம் புகுந் தார் ; மன்னனேக் கண்டார்; ஒளிவு மறைவு இன்றித் தம் உள்ளக் கருத்தைக் கூறினர்; அஞ்சாது கூறினர்; அமர் வேட்ட மன்னன் நெஞ்சம் தணிந்து கனியுமாறு பேசினர்; தம் சொல் லே வெல்லுஞ்சொல் வேறில்லாதவாறு