உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிசிராந்தையார் 103

பேசினர். அவர் பேசிய அப்பேச்சு-அருளும் அஞ்சாமை யும் நிறைந்த பேச்சு-போர் நீக்கித் தடுத்து அமைதி கிலே காட்டும் பேச்சு-பழி போக்கிப் புகழ் காக்கும் பேச்சு-இன் அறும் புறநானூற்றைப் படிக்கும் போது நம் செவிகளில் கேட்கிறது.

மடுத்தெழுந்த போரில் மாற்ருரைக் கொன்ற வலிய முயற்சியுடைய வெண்குடையால் உலகினே நிழல் செய்து காக்கும் புகழ் மிகுந்த வெற்றி பொருந்திய விரனே, ஆழி சூழ் இவ்வுலகின்கண் போர் வேட்டு கின்னெடு மாறுபட்டு வந்த இருவரும் யாரென்பதை நன்ருக நினைத்துப்பார் ! அவர்கள் தொன்றுதொட்டு வரும் கின் பகை வேந்த ராகிய சேரபாண்டியரும் அல்லர் ; யுேம் அவர்கட்கு அத் தகைய பழம்பகைவன் அல்லே. ஒன்ைைரக் கொல்லும் யானேப் படையுடைய தலைவ, பரந்த கின் கற்புகழை இப் பாருலகில் கிலே நாட்டி நீ மேலுலகம் எய்திய பின்னர், கி. விட்டு நீங்கிய ஆட்சியுரிமை அம்மக்கட்கே உரியது அன்ருே அதுவே முறையாதலும் நீ அறிந்த உண்மை தானே ? என்னும் கருத்தமைய

மண்டு)அமர் அட்ட மதனுடை நோன்தாள் வெண்குடை விளக்கும் விறல்கெழு வேந்தே ! பொங்குநீர் உடுத்தஇம் மலர்தலை உலகத்து நின்தலை வந்த இருவரை நினைப்பின் தொன்(று)உறை துப்பின்தின் பகைஞரும் அல்லர்; அமர்வெங் காட்சியொடு மாறு)எதிர்(பு) எழுந்தவர்; நினையுங் காலை நீயு மற்றவர்க்(கு) அனயை யல்ல; அடுமான் தோன்றல் பரந்துபடு நல்லிசை எய்தி மற்றுநீ உயர்ந்தோ ருலக மெய்திப் பின்னும் ஒழித்த தாயம் அவர்க்(கு)உசித் தன்றே! அதனுல், அன்ன(து) ஆதலும் அறிவோய்! (புறம் 2.18)