உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#64 சங்ககாலச் சான்ருேர்கள்

என்னும் பாடலைத் தொடங்கி, மேலும் பேசலானர் : "புகழ்மிக விரும்புவோனே, இன்னும் கேள்: நின்னெடு போர் செய்தற்குப் பெருவலியுடன் படை திரட்டி எழுந்த அறிவற்ற கின் மக்க்ள் தோற்பதே ஆகட்டும். அப் போது கின் பெருஞ்செல்வத்தை நீ யார்க்கு அளிப்பாய் ? போர் விரும்பும் செல்வனே, அவர்க்கு நீ தோற்ருலோ, கின் பகைவர் மகிழ அழியாப் பழியே கினக்குக் கிடைக் கும். ஆகலின், ஒழிவதாக கின் மறன் ! அஞ்சிைேர்க்கு அரணுகும் கின் தாள் நிழல் கல்வினை செய்வதாக பெறற் கரிய விண்ணுலகத்துள்ளார் கின்னே விருந்தாக ஏற்றுக் கொள்ள எழுக! வாழ்க கின் நல் நெஞ்சம் ' என்னும் கருத்தமைய

  • நன்றும்

இன்னும் கேண்மதி இசைவெய் யோயே நின்ற துப்பொடு நிற்குறித்(து) எழுந்த எண்ணில் காட்சி இ?ளயோர் தோற்பின் நின்பெருஞ் செல்வம் யார்க்(கு)எஞ் சுவையே ? அமர்வெஞ் செல்வ நீஅவர்க்(கு) உலையின் இகழுநர் உவப்பப் பழிஎஞ் சுவையே ; அதனுல், ஒழிகதில் அத்தைதின் மறனே! வல்விரைந்(து) எழுமதி வாழ்கதின் உள்ளம் அழிந்தோர்க்(கு) ஏமம் ஆகும்தின் தாள்நிழல் மயங்காது செய்தல் வேண்டுமால் நன்றே; வானுேர் அரும்பெறல் உலகத்(து) ஆன்றவர் விதுப்புறு விருப்பொடு விருந்(து)எதிர் கொளற்கே ! (புறம். 918) எனப்பாடி முடித்தார்.

எயிற்றியஞர் கூறிய மொழிகளேக் கேட்ட மன்னன் சிந்தனேக் கடலில் ஆழ்ந்தான்; அருந்தமிழ்ப் புலவர் கூறிய மொழிகள் அத்தனையும் உண்மை எனக்கண்டான்; அறமில்லா மக்களப் பெற்ருேமே!’ என்று மனம்