உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#66 சங்ககாலச் சான்ருேர்கள்

நோக்கிப் பெரியீர், என் ஆருயிர் நண்பராகிய பிசிராந்தை யார் இப்போது வருவார்,' என்று கூறினன். அது கேட்ட சான்ருேர் பெருவியப்பு அடைந்தனர்; அரசே, உன் பெயரையும் புகழையும் கேட்டறிந்ததே அன்றிப் பிசிராந்தையார் உன்னேக் கண்ணுற்கண்டதும் இல்லையே! அவர் எங்கனம் வருவார் ? என ஐயுற்று வினவினர். சான்ருேரின் க்ேள்வி, ஊனினே உருக்கி உள்ளொளி பெருக்கியிருக்கும் கோப்பெருஞ்சோழனது உள்ளத்தில் மறைந்திருந்த கவிதை ஊற்றையே தோண்டிவிட்டது. உணர்வு மிக்க மொழிகளால் சோழவேந்தன் தனக் கும் தன் நண்பர்க்கும் இடையே கிலேத்து நிற்கும் உணர்ச்சி ஒத்த நட்பின் திறத்தைச் சொல்லோவிய மாக்கிக் காட்டினன். பெரியீர், ஐயுறல் வேண்டா. என் ஆருயிர் நண்பர் தவருது வந்தே திருவார். . அவர் தம் பெயர் கூறும்போதும் என் பெயர் சோழன் எனக் கூறும் பண்புடை நண்பர். யான் வாழ்ந்த காலத்து அவர் வாராது போயினும், தாழ்ந்த காலத்து வரத் தவரு.ர். அவருக்கும் என்னருகில் ஒரிடம் ஒழித்து வையுங்கள், என்னும் கருத்தமைந்த பின் வரும் பாடல்களைக் கூறினன் :

தென்னம் பொருப்பன் நன்னுட் டுள்ளும் பிசிரோன் என்பனன் உயிரோம் பு:நனே ; செல்வக் காலை நிற்பினும் அல்லற் காலை நில்லலன் மன்னே.” கேட்டல் மாத்திரை அல்ல(து) யாவதும் காண்டல் இல்லா(து) யாண்டுபல கழிய வழுவின்று பழகிய கிழமையர் ஆகினும், அதே தோன்றல்! அதற்பட வொழுகல் என்(று) ஐயங் கொள்ளன்மின் ஆரறி வாவீர்! இகழ்விலன்; இனியன்; யாத்த நண்பினன்;