உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிசிராந்தையார் #67

புகழ்கெட வரூஉம் பொய்வேண் டலினே; தன்பெயர் கிளக்குங் காலே என்பெயர் பேதைச் சோழன் என்னுஞ் சிறந்த காதற் கிழமையு முடையன்; அதன்றலை இன்னதோர் காலே நில்லிலன் இன்னே வருகுவன்; ஒழிக்க அவற்(கு)இடமே. (புறம் 216) இவற்றைக் கேட்டவர் நெஞ்சம் அனலிடைப்பட்ட மெழுகாய் உருகியது. மன்னனது மாற்றம் கேட்ட சான் ருேர் மெய் சிலிர்த்தனர்; என்னே இவ்வரசன் உணர் வும் உறுதியும் ! என்று வியந்தனர். சான்ருேளுகிய கோப்பெருஞ்சோழன் சொல் பொய்க்குமோ?

அழிவின் அவைநீக்கி ஆறுய்த்(து) அழிவின்கண்

அல்லல் உழப்பதாம் நட்பு.’ (குறள், 787) எனவும்,

ஊழி பெயரினும் தாம்பெயரார் சன்ருண்மைக்(கு)

ஆழி எனப்படு வார்.’ (குறள், 989)

எனவும் கூறிய பொய்யில் புலவரின் பொருளுரை பிழைக் குமோ ?

என்ன விந்தை 1 ஐயுற்ற அச்சான்ருேசின் வியப்பு வரம்பற்றதாகும் வண்ணம் கோப்பெருஞ்சோழனது உள்ளமே கோயிலாகக்கொண்ட பிசிராந்தையாரும் அலை கடல் நோக்கிச் செல்லும் அணியாறென. ஒ டி வந் து அவிண் உற்ருர். அக்காட்சியைக் கண்டோர், ஈதென்ன மாயமோ! கற்பனேயோ!' என்று எண்ணி மருண்டனர்; தம் கண்களே அகலவிழித்து விழித்துப் புலவர் பெருமா ரைது திருமுகத்தை உற்று நோக்கினர். ஆம் அவரே பிசிராந்தையார். அவர் கண்களிலேதான் எத்தகைய ஒளி அவர் முகத்திலேதான் எவ்வளவு இளமை! அவர் தோற்றத்திலேதான் எத்துணைப் பெருமிதம்! புலவர் பெருமானரது பொன்பேர்ன்ற மேனியிலுள்ள ஒவ்வோர்