உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டியன் நெடுஞ்செழியன் 117

முன்-இன்பத் தமிழக த் தி ன் பொற்காலத்தில்-அரி யணே ஏறி அரசோச்சிய முப்பத்தொரு தமிழ் மன்னர் அருந்தமிழ் வளர்த்த புலவர்களாயும் விளங்கினர். இப் பெ ரு மையினே எண்ணும்போதெல்லாம் இன்ப வெறி கொள்ளும் கம் இதயம், இங்கிதன் மாண்பிற் கெதிரெது வேறே எனக் கேட்கத் துடிக்கின்றது அன்ருே ஆம் ! கன்னித் தமிழகத்திற்கு வாய்த்த இப்பெருமை, ஆழி சூழ் உலகில் வேறு எந்த நாட்டிற்கும் இல்லாத் தனிச் சிறப்பன்ருே ?

பாராளும் திறனுல் மட் டு ம ன் றி, வையகத்தைப் பாலிக்கும் பாட்டுத் திறனுலும் தமிழகத்தின் புகழிற்கு வாழ்வளித்த மன்னருள் ஒருவகிைய பாண்டியன் நெடுஞ் செழியன் இளமைப்பருவத்தினனுயிருந்த பொழுதே * தமிழ்கெழு கூடலைத் தலை நகராகக் கொண்ட பாண்டி நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்க நேர்ந்தது. ஆண் டில் இளேயணுயிருப்பினும், அறிவில் முதியோய்ை ஆண் மையில் பெரியோனுய் அ னு பவ த் தி ல் சிறந்தோனுய் விளங்கின்ை நெடுஞ்செழியன். அவ்வாறு அவன் மாட்சி யுடன் விள்ங்கியமையாலேயே குடபுலவியனுர், கல்லாடனுர், மாங்குடி கிழார், இடைக்குன்று ர் கிழார் ஆகிய சான்ருேர் அவன் புகழ் பாடிப் போற்றினர். பாண்டியன் நெடுஞ்செழியனது திருவோலக்கம் எஞ்ஞான்றும் திருவிழாக் காட்சியையே வழங்கி வந்தது. அறிவு சான்ற அமைச்சர்களும், அன்பு கெழுமிய புலவர்களும், வீர ஒளி வீசும் கடுங்கண் மறவர் களும், ஈரநெஞ்சம் படைத்த இசையும் கூத்தும் வல்ல கலைஞர்களும் அவனுறையும் கோயில் வாயிலில் குழுமிய வண்ணம் இருந்தார்கள். பலர் புகழ் ஞாயிறு கடற்கண் டாற்போலவும், விண்மீன் நடுவண் விளங்கு மதியம்போல வும் திகழ்ந்து, தமிழக ஆட்சியைக் கண்ணும் கருத்து மாய்க் காத்து வந்தான் பாண்டியன் நெடுஞ்செழியன்.