உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#18 சங்ககாலச் சான்ருேர்கள்

அவன் மண்டலத் தலைவர், வி ர ம ற வ ர், கல்லறிஞர், அருங்கலேஞர் முதலிய பல்லோரையும் விரும்பி அழைத் துப் போற்றிப் புரந்த செயல், கண் கொள்ளாக் காட்சி யாய் விளங்கியது. அதை ஒங்குபுகழ் மாங்குடி மருதனுர், பத்துப்பாட்டுள் ஒன்ருகிய மதுரைக் காஞ்சியில் அழகோவிய மாகச்-சொற்சித்திரமாகத்-தீட்டிக் காட்டியுள்ளார்: புலர்ந்த சாந்தின் விரவுப்பூந் தெரியல் பெருஞ்செய்ஆடவர்த் தம்மின் பிறரும் யாவரும் வருக! ஏனுேருந் தம்என வரைய வாயில் செருஅ(து) இருந்து பாணர் வருக! பாட்டியர் வருக! பாணப் புலவரொடு வயிரியர் வருக!'என இருங்கின புரக்கும் இரவலர்க்(கு) எல்லாம் கொடுஞ்சி நெடுந்தேர் களிற்ருெடும் வீசி

密 毅 锋 ※ முந்நீர் நாப்பண் ஞாயிறு போலவும் பன்மீன் நடுவண் திங்கள் போலவும் பூத்த சுற்றமொடு பொலிந்தினிது விளங்கி

(மதுரைக்காஞ்சி, அடி 745-52; 768-70) என்னும் அடிகளேக் காண்க.

இவ்வாறு நாடி வந்த கல்லோர்க்கெல்லாம் தேரும் களிறும் களிப்புடன் விசிப் புகழுடன் விளங்கிய நெடுஞ் செழியனுக்கு அரசுரிமை ஏற்ற சின்னளிலேயே பெருஞ் சோதனைகள் நோலாயின. நெடுஞ் செழியன் ஆட்சிப் பொறுப்பை மேற்கொண்ட நாளில் சேர சோழரும், குறு கில மன்னர் பிறரும் அவன் ஆ ளு கை க்கு அடங்கியே வாழும் கிலே இருந்தது. நாளடைவில் இவ்வாறு பாண்டி யன் ஆட்சிக்குப் பணிந்திருக்கும் நிலையை அவர்கள் வேம் பென வெறுத்தார்கள். அதன் விளைவாகச் சேரனும் சோழனும், திதியன், எழினி, எருமையூரன், இருங்கோ