உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 சங்ககாலச் சான்ருேர்கள்

உகுத்துக்கூறக் குடி மக்கள் பழி துாற்றும் கொடுங்கோலே உடையேனுகுக ! உயர்ந்த தலைமையுடனே சிறந்த கேள்வி யுடைய மாங்குடி மருதனுர் முதலான புலவர் பாடாது என் கிலவெல்லையை நீங்குவாராக! என்னுல் புரக்கப்படும் கேளிர் துயர் மிக, இரப்போர்க்கு ஈயலாகாத வறுமையை யான் அடைவேகை 1 எனத் துன்னருஞ்சிறப்பின் வஞ் சினம் கூறினன் பாண்டி வேந்தன். கேட்டவர் உடல் புல்லரித்தது. என்னே இம்மன்னனது ஆண்மை-ஆற் ருெணுச் சினம் ! என்னே இவ்வேந்தனது மன்னுயிர் புரக் கும் கன்னர் நெஞ்சம்-புலவர் மாட்டுக் கொண்ட பெரு மதிப்பு!” எனக் கற்ருேரும் மற்ருேரும் எண்ணி எண்ணி இறும்பூது கொள்ளல் ஆயினர்.

வழுதி உரைத்த வஞ்சினம் நாடெங்கும் பரவியது. காளேயர் செவிகளிலெல்லாம் காவலன் கூறிய விரமொழி கள் சென்று ஒலித்தன. அவர்தம் குருதி கொதித்தது. காளேயர், எம்மையாள் வேந்தன் உற்ற இழிவு எமக்கும் எக்தாய் நாட்டிற்கும் உற்றதன் ருே ' என உருத்து எழுந்தனர் ; தோள் கொட்டிக் குருதி பாயும் களங்காணத் துடித்தனர். பாண்டி காட்டின் திக்கெங்கும் அதிர்ந்த போர் முரசம் கேட்டு வில்லும் வாளும் ஏந்தி வேங்கைக் கூட்டமென எழுந்தவீரர் கூட்டம், கடலெனத்திரண்டது. இருங்கடல் போல விரிந்து கிடந்த மறவர் தானேக்கு இள ஞாயிறு அனேய நெடுஞ்செழியன் தலைமை தாங்கினன். பாய்மாவும், கொல்களிறும், நெடுந்தேரும், வாள் மறவரும் பார்க்குமிடமெல்லாம் நீ க் க ம ற நிறைந்திருந்தனர். பாண்டியனேப் போர்க்களத்தில் காண்போம்;கண்டு.சாய்ப் போம், எனக் கருதி எழுவர் படையும் மாறன் கலே நகர் நோக்கி மண்டலாயிற்று. எழுவரின் பெரும்படைக்கும் சேரன் தலைமை தாங்கி வந்தான். நகர்ப்புறத்தே கிடந்த பறந்தலையில் இரு புறத்து நாற்படைகளும் எதிரெதிர்