உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 சங்ககாலச் சான்ருேர்கள்

இறுதியாகத் தலையாலங்கானம் என்ற இடத்தில் பெரும்போர் மூண்டது. அங்கு நடந்த போர் வரலாற்றில் இதற்கு இனேயேதுமில்லை,” என்னும்படி மிகக் கொடிய தாய் அமைந்தது. தமிழ்ப் படைகள் தலே மயங்கின. அவ்வாறு தமிழ் தலே மயங்கிய தலையாலங்கானத்தில் களமெல்லாம் குருதிக் கடலாயிற்று. கணக்கற்ற பகழி கள் பாய்ந்த களிறுகளின் தோற்றம் குருவியினம் சென்று தங்கும் குன்றுகளின் தோற்றம் போன்றிருந்தது. கண்ட இடமெல்லாம் யானேகள் வெட்டப் பட்டு, அவற்றின் வாயோடு சேர்ந்த தும்பிக்கைகள் கலப்பைகள் போல கிலத்தின்மேல் புரண்டுகொண்டிருந்தன. அஞ்சி இரங் கத்தக்க காட்சிகள் நிறைந்திருந்த ஆலங்கானப் போரில் எண்ணற்ற உயிர்கள் எமனுக்கு இரையாயின. தனிய னை தன்னே எழுவரும் வசீளத்துக்கொண்டு தாக்குதல் கண்டான் பாண் டிய ன் ; போர் வெறி கொண்டான். அவன் விழிகளில் சினத்திச் சீறி எழுந்தது. அவன் குரல் கேட்டு எண் டிசையும் நடுங்கின. அவன் எழுவர் கல்வலம் அடங்க”த் தான் தமியணுய் கின்று பொருதான். செழியன் இளேயன்; சிறியன், என எண்ணிய இகல் வேந்தர், மனம் இடிந்து போயினர். சிங்கக் குருளே போலச் சினங்கொண்டு தாக்கினன் செழியன். எதிர்த்து வந்த எழுவரும் வெஞ்ஞாயிற்றின் திறலனேய பாண்டியன் ஆற் றல் கண்டு அஞ்சினர்; தளர்ந்தனர். அது கண்ட செழிய அனும் அவன் படைஞரும் விண் அதிர ஆர்த்து, மேலும் மேலும் சென்று சாடினர். பாண்டியனே எதிர்த்து வந்த படைகள் சூருவளியில் பட்ட சிறு துரும்பெனச் சுழன்று சிதறி ஓடின. இருபெரு வேங் த ரு ம் வேளிர் ஐவரும் அரிமாவிடம் சிக்கிய களிறுகளாயினர் : அவன் ஆற்ற லுக்கு எதிர் கிற்க வலியின்றித் தோற்றனர்; தல்ை சாய்க் தனர். இருபெரு வேந்தரும் களத்திடை வீழ்ந்த காட்சி,