உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டியன் நெடுஞ்செழியன் H23

விண்ணில் இயங்கும் இருபெருஞ்சுடர்களும் மண்ணின் மேல் வீழ்ந்தாற்போல விளங்கியது. வேந்தர் எழுவரின் வெற்றி முரசங்களும், குடையும், கொடியும் பாண்டியனுல் கைக்கொள்ளப்பட்டன. வெற்பனேய வேம்பன் தோள் களில் வெற்றித்திரு விருப்புடன் மேவி வீற்றிருக்கலாயி ள்ை. 1வைகைத் கலைவன் நடத்திய கன்னிப்போர் அவ னுக்கு நிகரில்லா வெற்றியையும் பெரும்புகழையும் அளித்தது. பாண்டியன் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன் ஆளுன் அவன் பெரும்புகழ் குமரி முனேயிலும் வடபெருங்கல்லிலும் எதிரொலி செய் தது. இன்றும் அவன் பெற்ற வெற்றியின் சிறப்பினேச் சங் கப் பாடல்களும், மூன்ரும் இராசசிங்க பாண்டியன் வரைக் தளித்த செப்பேடுகளும் வாய் விட்டு முழங்குகின்றன. இவ்வாறு புகழ் கொண்ட வேந்தனே - வெற்றிவேற் செழியனேப்-புலவர் பாடிப் புகழ்ந்தனர். த லே ய | ல ங் கானத்தில் நெடுஞ்செழியன் நிகழ்த்திய போரை நேரில் கண்டவருள் இடைக்குன்றும் கிழார் ஒருவர். அவர் பாடிய நான்கு புறப்பாடல்கள் ஆலங்கானப் போரை நம் அகக் கண்கட்கு அப்படியே படம் பிடித்துக் காட்டுகின்றன. இடைக்குன்றுார் கிழார்க்கு நெடுஞ்செழியனே கினேக்கும் போதெல்லாம் அவன் இளமைத் தோற்றமும், தனி ஒரு வளுய் கின்று எழுவரையும் வென்ற புதுமைச் செயலுமே மீண்டும் மீண்டும் தோன்றி, எல்லேயில்லா வியப்பினே அளித்தன. அவ்வாறு தாம் பெற்ற வியப்பும் மகிழ்வும் எல்லாரும் அடையும் வண்ணம் அவர் பாடியுள்ள பின் வரும் பாடல்கள் அழகும் அருமையும் உடையன: 1. தலையாலங் கானத்திற் றன்னுெக்கு மிருவேந்தரைக்

கொலேவாளிற் றலேதுமித்துக் குறைத்தலேயின் கூத்தொழித் தும்’ —South Indiam Inscriptioms, Vol. III, No. 206