உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டியன் நெடுஞ்செழியன் #25

நெடுங்கொடி உழிஞைப் பவரொடு மிலேந்து குறுந்தொடி கழித்தகைச் சாபம் பற்றி நெடுந்தேர்க் கொடுஞ்சி பொலிய நின்ளுேன் யார்கொல்! வாழ்கஅவன் கண்ணி ! தார்பூண்டு தாலி களைந்தன்றும் இலனே பால்விட்டு) அயினியும் இன்(று)அயின் றனனே..;வயின்வயின் உடன்றுமேல் வந்த வம்ப மள்ளதை வியந்தன்றும் இழிந்தன்றும் இலனே ; அவரை அழுந்தப் பற்றி அகல்விசும்(பு) ஆர்ப்பேழக் கவிழ்ந்துநிலஞ் சேர அட்டதை மகிழ்ந்தன்றும் மலிந்தன்றும் அதனினு மிலனே. (புறம். ??) இவ்வாறு களிறு போல் பெருமிதத்தோடு களம் நோக்கிச்சென்ற நெடுஞ்செழியன், முழையிற்கிடந்த புலி தான் விரும்பிய இரை நோக்கி எழுந்து வந்தாற்போன்ற, தன் மாறுபடுதற்கரிய மார்பத்தை மதியாராய், ! யாம் பெரியம்; செழியன் இளேயன்; அடையக்கூடிய கொள்ளே பெரிது, என எண்ணி வந்த மன்னரைத் தன் பாண்டி காட்டுள் கொல்ல விரும்பாது, அவர் தந்தையார் ஊரி லேயே அவர் பெண் டிர் நாணி இறந்துபடுமாறு போர்ப் பறை முழங்கச்சென்று கொன்ற காட்சியின-வரலாற்றுச் செய்தியினேப்-புலவர் கூறும் பாடல்கள் கற்பார் நெஞ் சில் செழியன் கொண்ட சினத்தின் வெம்மையைப் புலப் படுத்துவதோடு போரால் வரும் அழிவு கண்டு இதயம் இரங்குமாறும் செய்கின்றன. இடைக்குன்றுார் கிழாரே அன்றிக் கல்லாடனுர், மாங்குடி மருதனுர் போன்ற புல வரும் நெடுஞ்செழியன் வெற்றியைப் புகழ்ந்தனர்; எனி இணும், அவர்தம் பாடல்களில் வெம்போரால் விளையும் பேரழிவினேப் புலப்படுத்துதல்வாயிலாக நெடுஞ்செழியன் மனத்தை நெகிழ்வித்து அவன் போர் வெறி தணிக்கவே பெரிதும் விரும்பினர். அவ்வுண்மை அச்சான்ருேச்களின்